HOLLYWOOD
தி கிரே மேன் படத்தை மகன்களுடன் கண்டுகழித்த தனுஷ்.. வைரல் புகைப்படங்கள்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது மகன்களுடன் தான் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தனுஷ்.
“தி எக்ஸ்டிராடினரி ஜார்னி ஆஃப் ஃபகீர்” என்ற திரைப்படம் மூலம் தான் தனுஷ் ஹாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். இந்திய திரையுலகமே அவரை “ஆ” என பார்த்தது. அதன் பின் ஹிந்தி, தமிழ் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் தான் “தி கிரே மேன்” திரைப்படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்ற சுவாரசியமான தகவல் வந்தது. அதனை தொடர்ந்து இத்திரைப்படம் குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.
ரசிகர்கள் காத்திருந்தது போல் “தி கிரே மேன்” திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது. மேலும் சமீபத்தில் “தி கிரே மேன்” திரைப்படத்தில் தனுஷ் இடம்பெற்ற காட்சி ஒன்று இணையத்தில் வைரல் ஆனது.
அந்த காட்சியை “தி கிரே மேன்” திரைப்படத்தின் இயக்குனர்கள் ருஸ்ஸோ பிரதர்ஸ் வெளியிட்டனர். “தி கிரே மேன்” திரைப்படத்தில் அவிக் சான் என்ற கதாப்பாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார். கொலைகளை செய்யும் Assassin கதாப்பாத்திரமான ஆவிக் சான் “தி கிரே மேன்” திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரமாக அறியப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் “தி கிரே மேன்” திரைப்படத்தின் Premiere காட்சி நடைபெற்றது. இதில் தனுஷ் தனது மகன்களான யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்டார்.
மூவரும் கோர்ட் ஷூட்டில் தாறுமாறாக இருக்கின்றனர். இப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
“தி கிரே மேன்” திரைப்படம் வருகிற 22 ஆம் தேதி “நெட்ஃபிளிக்ஸ்” ஓடிடி தளத்தில் வெளிவருகிறது. இதில் தனுஷுடன் ரியான் கோஸ்லிங், கிரிஸ் ஈவன்ஸ், அனா டி அர்மாஸ் ஆகிய பிரபல ஹாலிவுட் நடிகர்கள் நடித்துள்ளனர்.
View this post on Instagram
