HOLLYWOOD
“கேப்டன் அமெரிக்காவுடன் மோதும் தனுஷ்”… ஹாலிவுட் படத்தின் புதிய அப்டேட்
தனுஷ் நடிப்பில் உருவான ஹாலிவுட் திரைப்படம் “தி கிரே மேன்” ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட் வெளிவந்துள்ளது.
தனுஷ் தமிழில் மட்டுமல்லாது “ராஞ்சனா” திரைப்படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். அப்படம் தமிழில் “அம்பிகாபதி” என்று வெளிவது சக்கை போடு போட்டது.
அதனை தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து “ஷமிதாப்” திரைப்படத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து திடீர் திருப்பமாக தனுஷின் ஹாலிவுட் என்ட்ரி பிரவேசமானது.
“தி எக்ஸ்டிராடினரி ஜார்னி ஆஃப் ஃபகீர்” என்ற திரைப்படம் மூலம் ஹாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். இந்திய திரையுலகமே அவரை “ஆ” என பார்த்தது. அதன் பின் ஹிந்தி, தமிழ் என பல திரைப்படங்களில் நடித்து வந்த அவர் சமீபத்தில் அவர் நடிப்பில் “தி கிரே மேன்” என்ற ஹாலிவுட் திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளிவந்தது.
அதன் பின் சில மாதங்கள் கழித்து “தி கிரே மேன்” திரைப்படத்தில் தனுஷ் இடம்பெற்ற ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்து பட்டையை கிளப்பியது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீடு குறித்த ஒரு முக்கிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது “தி கிரே மேன்” திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற ஜூலை மாதம் 22 ஆம் தேதி வெளிவரவுள்ளதாக அதிகாரப் பூர்வ தகவல் வெளிவந்துள்ளது.
இத்திரைப்படத்தில் க்ரிஸ் ஈவன்ஸ் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இவர் தான் மார்வெல் திரைப்படங்களில் “கேப்டன் அமெரிக்கா” கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர்.
“தி கிரே மேன்” திரைப்படத்தை அந்தோணி ரஸ்ஸோ மற்றும் ஜோ ரஸ்ஸோ ஆகியோர் இயக்கியுள்ளனர். இத்திரைப்படத்தில் க்ரிஸ் ஈவன்ஸுடன் இணைந்து ரயான் கோஸ்லிங்க், அனா டி அர்மாஸ் போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.