Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

காரக்குழம்பு கனியின் புதிய அவதாரம்.. என்ன தெரியுமா?

TELEVISION

காரக்குழம்பு கனியின் புதிய அவதாரம்.. என்ன தெரியுமா?

“குக் வித் கோமாளி” கனி ஒரு பிரபல சேன்னலில் தொகுப்பாளினியாக பங்கேற்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“குக் வித் கோமாளி” சீசன் 2 நிகழ்ச்சியில் காரக்குழம்பை காட்டியே டைட்டில் வின்னர் ஆனவர் கனி. இவர் அந்த நிகழ்ச்சியில் சமைத்த காரக்குழம்பு சிறப்பான ஒன்றாக கருதப்பட்டதால் அவருக்கு காரக்குழம்பு கனி என்று பெயர் வந்தது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள்களின் ஒருவர் கனி. இவருடைய கணவர் திருவும் ஒரு இயக்குனர் தான். இவரது தங்கைகளில் ஒருவரான விஜயலட்சுமி “சென்னை 28”, “அஞ்சாதே” போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவரின் இரண்டாவது தங்கையான நிரஞ்சனி “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் அந்த திரைப்படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியையும் திருமணம் செய்துகொண்டார்.

இவ்வாறு குடும்ப பின்னணி கொண்ட கனி பல ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். அதனை தொடர்ந்து “குக் வித் கோமாளி” சீசன் 2 நிகழ்ச்சியில் நுழைந்து டைட்டிலையும் கைப்பற்றினார்.

கனி அவருக்கென்றே தனியாக யூட்யூப் சேன்னல் ஒன்று வைத்திருக்கிறார். அதில் பொன்னியின் செல்வன் நாவலை முழுக்கதையாக எபிசோட் எபிசோடாக கூறி வருகிறார். இது பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் பல திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் கனி பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் கனி தற்போது ஒரு பிரபலமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய சமையல் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்ற உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது சன் தொலைக்காட்சியில் ஒரு புதிய சமையல் நிகழ்ச்சி தொடங்கவுள்ளதாகவும் அந்த நிகழ்ச்சியை கனி தொகுத்து வழங்குவதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

Continue Reading

More in TELEVISION

To Top