GOSSIPS
Crush நடிகைக்கு வந்த வாழ்வை பாருங்க.. கதிகலங்கும் சக நடிகைகள்
Crush நடிகைக்கு வந்த வாழ்வை பார்த்து அவரின் சக நடிகைகள் பலரும் கதிகலங்கி உள்ளனராம்.
இந்திய இளைஞர்களையே தனது கியூட் எக்ஸ்ப்ரஷன்கள் மூலம் கவர்ந்திழுத்த அந்த Crush நடிகை, கவர்ச்சியில் தாராளத்தை கடைப்பிடிப்பவர். இவர் தெலுங்கு, கன்னடம் என நடித்து வந்தாலும் திடீரென அந்த தெலுங்கு படத்தில் போட்ட குத்தாட்டம் இவரை எங்கோ அழைத்துச் சென்றுவிட்டது. தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பேன் இந்திய ஹீரோயினாக வலம் வருகிறார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி கதாநாயகர்களுடனேயே நடிக்கிறார். இந்த வளர்ச்சி சக நடிகைகளை கலங்கடித்துள்ளதாம்.
இந்தியாவின் டாப் சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் இவரை புக் செய்ய இவரின் இல்லத்திற்கு வந்த வண்ணம் உள்ளனராம். இந்தியாவின் டாப் மார்க்கெட்டில் இருக்கும் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்கள் யார் நடித்தாலும் அவர்களின் ஃபர்ஸ்ட் சாய்ஸாக இவரே இருக்கிறாராம். ஆதலால் டாப் மோஸ்ட் நடிகைகள் பலரும் இவர் மேல் காண்டாக இருக்கின்றார்களாம்.
தற்போது கூட தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரு மாஸ் நடிகருடன் நடித்து வருகிறார். அதன் பின் அவர் கைகளில் பல திரைப்படங்கள் இருக்கின்றன. இன்னும் அவரை பத்து வருடங்களுக்கு கையிலேயே பிடிக்க முடியாதாம், அவ்வளவு பிசியாக இருக்கிறாராம் அம்மணி என சினிமா வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
ஏற்கனவே பலரின் கிரஷ் நடிகை என்ற அந்தஸ்தை கைப்பற்றிக் கொண்டு சுற்றித் திரியும் அந்த நடிகை தற்போது முன்னணி கதாநாயகர்களின் திரைப்படத்தில் நடித்து வருவது சினிமா வட்டாரங்களை “ஆ” என வாயை பிளந்து பார்க்கவைத்துள்ளதாம்.