TELEVISION
குக் வித் கோமாளியின் கலக்கலான வைல்ட் கார்ட் என்ட்ரி.. களேபரமான கோமாளிகள்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் என்ட்ரியில் ஆச்சரியத்தக்க முகங்கள் அறிமுகமாகி உள்ளன.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசன் ஆரம்பமானது. நகைச்சுவையான சமையல் நிகழ்ச்சி என்ற புதிமையான சிந்தனை கை கொடுக்க குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது.
தமிழ்நாட்டின் “ஸ்ட்ரெஸ் பஸ்டர்” என்றும் அழைக்கப்பட்டது. கோமாளிகளான ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, புகழ் ஆகியோர் தங்களது சேட்டைகளால் மக்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தனர். முதல் சீசனில் வனிதா விஜயகுமார் வெற்றி பெற்றார்.
பின்னர் 2020 ஆம் ஆண்டு குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் தொடங்கியது. இதில் கோமாளிகளாக முந்தைய நால்வருடன் சுனிதா, சக்தி, தங்கதுரை ஆகியோர் கலகலப்பாக நிகழ்ச்சியை கொண்டு சென்றனர். இதில் கனி வெற்றி பெற்றார்.
இதனை தொடர்ந்து சீசன் 3 எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பெரும் கலகலப்புடமன் மூன்றாவது சீசன் தொடங்கியது. இதில் கோமாளிகளாக அதிர்ச்சி அருண், சுனிதா, மணிமேகலை, பாலா, குரைஷி, ஷிவாங்கி, மூக்குத்தி முருகன், பரத் ஆகியோர் அட்டகாசம் செய்து வருகின்றனர்.
இதில் குக்குகளாக ராகுல் தாத்தா, மனோபாலா, கிரேஸ் கருணாஸ், ஆண்டனிதாசன், சந்தோஷ், தர்ஷன், அம்மு அபிராமி, ரோஷினி, ஸ்ருதிகா, வித்யுலேகா ஆகியோர் பங்கேற்று வந்தனர். இதில் ராகுல் தாத்தா, மனோபாலா, ஆண்டனிதாசன், சந்தோஷ், ஆகியோர் போட்டியில் தோற்று வெளியேறினார்கள்.
இதனை தொடர்ந்து வைல்ட் கார்டில் இரண்டு புதிய குக்குகளை அறிமுகம் செய்திருக்கிறார்கள். அதில் ஒருவர் தொலைக்காட்சி நடிகர் சுட்டி அரவிந்த். இன்னொருவர் பேட்ட, சார்பட்டா பரம்பரை போன்ற படங்களில் நடித்த முத்துக்குமார். இருவரும் முதல் எபிசோட்டிலேயே தங்களது சமையல் திறமையை வெளிகாட்டி செஃப்களிடம் பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
