TELEVISION
“தயவு செஞ்சு மணிமேகலையை அனுப்பிடுங்க’.. கதறும் சந்தோஷ்
தயவு செய்து மணிமேகலையை அனுப்பிடுங்க என குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சந்தோஷ் நடுவர்களிடம் கெஞ்சினார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியில் சென்ற வாரம் வைல்ட் கார்ட் ரவுண்டு நடைபெற்றது. இதில் எலிமினேட் ஆன குக்குகள் சந்தோஷ், முத்துக்குமார், கிரேஸ், ராகுல் தாத்தா, சுட்டி அரவிந்த், ரோஷினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் கோமாளிகள் வழக்கம்போல் பல கெட் அப்களில் வந்திருந்தனர். அதில் மணிமேகலை “சின்ன கவுண்டர்” விஜயகாந்த் கெட் அப்பில் வந்திருந்தார். ராகுல் தாத்தாவிடம் “உங்களுக்கு எந்த கோமாளி வேண்டும்?” என நடுவர்கள் கேட்டனர்.
அப்போது ராகுல் தாத்தா, “மணிமேகலை” என கூறினார். அப்போது சந்தோஷ் “தயவு செய்து மணிமேகலையை அவருடன் அனுப்பிவிடுங்கள்” என கேலியாக கூறினார்.
அதன் பின் ராகுல் தாத்தா மணிமேகலையை வைத்து செய்துவிட்டார். எல்லா விஷயத்திற்கும் திட்டிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் “நீ இந்த வேலைக்கு லாயக்கு இல்ல, அந்த வேலைக்கு தான் லாயக்கு” என ராகுல் தாத்தா கூறியபோது அரங்கமே சிரித்தது.
போட்டியின் இறுதியில் சந்தோஷ், கிரேஸ், முத்துக்குமார் ஆகியோர் இறுதி சுற்று வரை சென்றனர். அதில் சந்தோஷ் சிறப்பாக சமைத்து ஐந்தாவது ஃபைனலிட்டாக தேர்வானார். அதன் பின் எதிர்பாராவிதமாக கிரேஸ் ஆறாவது ஃபைனலிட்டாக தேர்வானார்.
முத்துக்குமார் சிறப்பாக சமைத்து சில பாயிண்ட்டுகள் வேறுபாட்டால் வேறு வழியின்றி எலிமினேட் ஆனார். இந்நிலையில் அடுத்த வாரம் ஃபினாலே வாரம் என்பதால் சந்தோஷ், கிரேஸ், ஸ்ருத்திகா, அம்மு அபிராமி, தர்ஷன், வித்யூலேகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் யார் வெற்றி பெற்று சீசன் 3 டைட்டிலை கைப்பற்றப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.