TELEVISION
குக் வித் கோமாளி டைட்டிலை தட்டிச்சென்ற சூர்யா பட நாயகி…
“குக் வித் கோமாளி” சீசன் 3 டைட்டிலை தட்டிச்சென்றுள்ளர் அந்த சூர்யா பட நாயகி.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் சீசன் 3 நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று ஒளிபரப்பான ஃபைனல் போட்டியில் வித்யூலேகா, ஸ்ருத்திகா, அம்மு அபிராமி, தர்ஷன், கிரேஸ், சந்தோஷ் ஆகியோர் போட்டியிட்டனர்.
மேலும் இந்த சீசனின் கடைசி எபிசோடு என்பதால் எலிமினேட் ஆன குக்களும், இந்நிகழ்ச்சியில் இது வரை வந்த அனைத்து கோமாளிகளும் கலந்து கொண்டனர். ஸ்ருத்திகா கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற டிக்கெட் டூ ஃபினாலே ரவுண்டில் சிறப்பாக சமைத்து ஃபினாலேவில் நேரடியாக நுழைந்தார்.
அதன் பின் செமி ஃபைனல் வாரத்தில் அம்மு அபிராமி, முத்துக்குமார், வித்யூலேகா, தர்ஷன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் முத்துக்குமார் எலிமினேட் ஆனார். மற்ற மூவரும் ஃபைனலுக்குச் சென்றனர்.
அதன் பின் வைல்ட் கார்டு ரவுண்டில் இதற்கு முன் எலிமினேட் ஆன ராகுல் தாத்தா, ரோஷினி, சந்தோஷ், கிரேஸ், முத்துக்குமார், சுட்டி அரவிந்த் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் சிறப்பாக சமைத்த முத்துக்குமார், கிரேஸ், சந்தோஷ் ஆகியோர் Face off challenge-ல் போட்டியிட்டனர். இதில் கிரேஸ், சந்தோஷ் ஆகியோர் ஃபினாலேக்கு சென்றனர். முத்துக்குமார் வெளியேறினார்.
இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” சீசன் 3 ஃபைனலில் சிறப்பாக சமைத்து ஸ்ருத்திகா இந்த சீசனின் டைட்டிலை வென்றார். ஸ்ருத்திகாவின் கணவர் அர்ஜூனும் இந்த நிக்ழச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய மனைவியின் வெற்றியை கொண்டாடினார். கடந்த 6 மாதங்களாக பார்வையாளர்களை மகிழவைத்த “குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது.
