TELEVISION
குக் வித் கோமாளி Old Batch ரிட்டர்ன்ஸ்… சும்மா கலைகட்டப்போகுது
“குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் இந்த வாரம் கடந்த சீசனை சேர்ந்த பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
“குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியில் சென்ற வாரம் எலிமினேஷன் வாரம் என்பதால் குக்குகள் கொஞ்சம் சீரியஸாகவும் கொஞ்சம் கலகலப்பாகவும் பங்கேற்றுக் கொண்டனர் .ஸ்ருத்திகா ஏற்கனவே இம்யூனிட்டி வாங்கியதால் ஹாயாக சுற்றிக் கொண்டிருந்தார்.
இதனை தொடர்ந்து சென்ற வாரம் ரோஷினியும் முத்துக்குமாரும் எலிமினேஷன் ரவுண்டு வரை வந்தனர். எலிமினேஷன் ரவுண்டில் தங்களால் முடிந்த வரையில் முயற்சி செய்தனர். ஆனால் இருவரில் துர்திஷ்டவசமாக ரோஷினி எலிமினேட் ஆகி வெளியே சென்றார்.
ரோஷினி மேல் மிகவும் அன்பு வைத்திருந்த கன்டெஸ்டெண்டுகளும் கோமாளிகளும் மிகவும் சோகமாகி விட்டனர். குறிப்பாக ரோஷினியிடம் மிகவும் நெருக்கமாக பழகி வந்த மணிமேகலை கண்ணீர் வடித்தார்.
இதனை தொடர்ந்து “குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான புரோமோக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதில் இந்த வாரம் Celebration வாரம் என தெரிகிறது.
அதாவது “குக் வித் கோமாளி” சீசன் 2 நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்கள் இந்த வாரம் சீசன் 3 குக்குகளோடு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். சென்ற சீசனில் கலந்து கொண்ட ஷகீலா, கனி, பவித்ரா, தமிழ் ரித்திகா, தீபா ஆகியோர் மீண்டும் தோன்றியுள்ளனர்.
ஆகையால் இந்த வாரம் கலகலப்புக்கு பஞ்சம் இல்லை என தோன்றுகிறது. அதே போல் இந்த வாரம் குக்குகள் அதிகமாக உள்ளதால் கோமாளிகளும் அதிகமாக உள்ளனர்.
ஏற்கனவே மணிமேகலை, சுனிதா, சிவாங்கி, பாலா, பரத், குரேஷி ஆகியோர் இருக்கும் நிலையில் இந்த வாரம் அவர்களோடு புகழ், சீத்தல், அதிர்ச்சி அருண், ஷரத் ஆகியோர் இந்த வாரம் கோமாளிகளாக கலக்க உள்ளனர். ஆதலால் இந்த வாரம் நிகழ்ச்சி கலைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
