TELEVISION
குக் வித் கோமாளி இறுதி நாள் புகைப்படங்கள்..
“குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியின் இறுதி நாள் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
“குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியின் ஃபைனல்ஸ் முடிவடைந்தது. ஸ்ருத்திகா அர்ஜூன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளிவருகின்றன.
கடந்த 6 மாதங்களாக “குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சி ரசிகர்களை மகிழ்வித்து வந்தது. தற்போது இந்த நிகழ்ச்சி நிறைவு பகுதியை எட்டியுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
“குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியில் பங்குகொண்ட குக்குகள் தங்கள் சமூக வலைத்தளங்களில் “குக் வித் கோமாளியில் அனைவரையும் மிஸ் செய்கிறோம்” என தங்களது சோகத்தை பகிர்ந்து வருகின்றனர். “குக் வித் கோமாளி” சீசன் 4 அடுத்த ஆண்டோ அல்லது இந்த ஆண்டு இறுதியோ தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாரம் நடைபெற்ற ஃபைனல் போட்டியில் ஸ்ருத்திகா, வித்யூலேகா, கிரேஸ், சந்தோஷ், தர்ஷன், அம்மு அபிராமி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் கிரேஸ், வித்யூலேகா, ஸ்ருத்திகா ஆகியோர் Toughest குக்குகள். இவர்கள் மூன்று பேருக்குள்ளும் கடும் போட்டி இருக்கும். எனினும் ஸ்ருத்திகா தனித்துவமானவர்.
இந்நிலையில் ஸ்ருத்திகா தான் “குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் “குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியின் இறுதி நாள் படப்பிடிப்பில் அனைவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
இப்புகைப்படங்களின் மூலம் நமது நினைவுகள் என்றும் இருக்கும் என பல ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றன. அப்புகைப்படங்கள் இதோ…
