TELEVISION
குக் வித் கோமாளியில் இன்று யார் வெளியேறப் போகிறார் தெறியுமா?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இன்று யார் வெளியேறப் போகிறார் தெரியுமா?
தமிழ் நாட்டின் ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்று புகழப்படும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது கலகலப்பாக நடந்து கொண்டிருக்கிறது. சென்ற எலிமினேஷன் வாரத்தில் வைல்ட் கார்டில் உள்ளே வந்த சுட்டி அரவிந்த் வெளியேறினார்.
சென்ற வாரமான இம்யூனிட்டி வாரத்தில் முத்துக்குமார் Immunity band –ஐ தட்டிக் கொண்டு சென்றார். இந்த வாரம் எலிமினேஷன் வாரம் என்பதால் குக்குகள் அனைவரும் படபடப்பு கலந்த ஜாலி Mode-ல் சமைத்தனர்.
ஒவ்வொரு வாரமும் புது புது கெட் அப்களில் வந்து அசத்தும் கோமாளிகள் இந்த வாரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெட் அப்களில் வந்திருந்தனர். இதில் குறிப்பாக மணிமேகலை பாட்ஷா கெட் அப்பில் வந்திருந்தார்.
அப்போது அவர் இதுவரை எலிமினேஷன் ரவுண்டு வரை வராத குக்குகளான வித்யூலேகா மற்றும் கிரேஸ் ஆகியோர் இந்த வாரம் எலிமினேஷன் ரவுண்டிற்கு வருவார்கள் என ஜாலியாக சாபம் விட்டார். எனினும் அது நடந்து விட்டது போல் தெரிகிறது.
அதாவது கடந்த புரோமோவில் நாம் பார்த்தது போல் கிரேஸ் மற்றும் வித்யூலேகாவில் யாரோ ஒருவர் தான் எலிமினேட் ஆக உள்ளார்கள் என கூறப்படுகிறது. மணிமேகலை சொன்னது பலித்து விட்டது என பலரும் கூறி வருகின்றனர்.
வித்யூலேகா மற்றும் கிரேஸ் ஆகிய இருவரும் கடுமையாக போட்டி போடும் குக்குகளாக அறியப்படுபவர்கள். இவர்கள் இருவரில் ஒருவர் இன்று எலிமினேட் ஆக உள்ளதாக கூறப்படுவது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இதன் உண்மை தன்மையை அறிய இன்றைய எபிசோட் வரும் வரை நாம் காத்திருக்க வேண்டியுள்ளது.