TELEVISION
“குக் வித் கோமாளி பார்த்தால் குழந்தை பிறக்கும்”.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
குக் வித் கோமாளி நடுவர் வெங்கடேஷ் பட் “குக் வித் கோமாளி பார்த்ததால் ஒருவருக்கு குழந்தை பிறந்தது” என கூறியதை நெட்டிசன்கள் பங்கமாய் கலாய்த்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்று அறியப்படும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் சீசன் 3 கலகலப்பாக நடந்து வருகிறது. நேற்றைய எபிசோட்டில் நடுவர் வெங்கடேஷ் பட் “ ஐ வி எஃப்-க்காக (செயற்கை கருவூட்டல்) சென்ற ஒரு பெண் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்த்ததால் தான் குழந்தை பிறந்தது” என தன்னிடம் அந்த பெண் கூறியதாக தெரிவித்தார்.
இந்நிலையில் நெட்டிசன்கள் வெங்கடேஷ் பட் சொன்ன அந்த வரிகளை கொண்டு பங்கமாய் கலாய்த்து வருகின்றனர். “அப்படின்னா “எதுவும்” பண்ண தேவையில்லையா?” என கேலி செய்து வருகின்றனர்.
எனினும் சிலர் “வெங்கடேஷ் பட் சொன்னது செயற்கை கருவூட்டல் சிகிச்சைக்காக சென்ற பெண். அதில் உறவு வைத்துக் கொள்ளத் தேவை இல்லை. குழந்தை நல்லபடியாக பிறப்பதற்கு Stress இருக்கக்கூடாது. அந்த பெண் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்த்து விட்டு stress இல்லாமல் சிகிச்சைக்கு சென்றிருப்பார். அதனால் தான் அப்படி சொல்லிருப்பார்” என பதிலடி கொடுத்தும் வருகின்றனர்.
மேலும் புகழ், தனக்கு ஒரு பெண் தற்கொலை செய்ய தூக்கு போடச் சென்றதாகவும் ஆனால் அப்போது குக் வித் கோமாளி புரோமோ பார்த்து விட்டு தற்கொலை எண்ணத்தை தவிர்த்ததாகவும் மெசேஜ் அனுப்பி இருந்தார் என கூறியது மேலும் நெட்டிசன்களால் கேலிக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.
எனினும் நேற்று வெங்கடேஷ் பட் கூறியதில் அங்குள்ளவர்கள் பலருக்கும் மெய் சிலிர்த்துப் போனது. அது ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.