TELEVISION
“இப்படி என்னைய மாட்டிவிட்டுட்டீங்களே சார்”.. ரக்சன் வேலைக்கு ஆப்பு வைத்த வெங்கடேஷ் பட்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்சனை ஆங்கரிங்க் பண்ண வேண்டாம் என்று கூறிய வெங்கடேஷ் பட். என்ன நடந்தது தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த வார எபிசோடும் வழக்கம் போல் கலகலப்பாகிய தொடங்கியது. இம்யூனிட்டி ரவுண்டான நேற்று அம்மு அபிராமி, ஸ்ருதிகா இருவரும் தவிர்க்க முடியாத காரணங்களால் கலந்து கொள்ள முடியவில்லை.
நேற்று சர்ப்ரைசாக புகழ் சுட்டி ரமேஷுக்கு கோமாளியாக வந்திருந்தார். ஆனாலும் இதையெல்லாம் தாண்டி ஒரு பெரிய டிவிஸ்ட் ஒன்று ரக்சனுக்கு நடந்தது. அதாவது ரக்சனை வெங்கட்ஷ் பட் “ஒரு நாள்” குக்காக மாற்றினார்.
“அய்யோ” என ஆயிற்று ரக்சனுக்கு. அதுவும் அவருக்கு கோமாளியாக பரத். சொல்லவே தேவையில்லை. அதிரி புதிரியாக சொதப்ப போகிறார்கள் என தெரிந்தது.
வழக்கம்போல் வித்யூலேகாவை பங்கமாய் கலாய்த்து தள்ளினார் பாலா. பாலா “பாபா” ரஜினி கெட் அப் போட்டு வந்திருந்தார். அப்போது வித்யூலேகா “ரஜினிக்கு டச் அப் பாயா போக கூட இவனால் முடியாது. இதுல ரஜினி கெட் அப் போட்ருக்கான் இவன்” என கலாய்த்தார். அதற்கு பாலா “மேடம் என்ன எமிஜாக்சனோ?” என பங்கமாய் கலாய்த்துவிட்டார்.
அட்வாண்டேஜ் ரவுண்டில் வெந்நீரில் உருளைக்கிழங்கு தோளை உரிக்கும் டாஸ்க் வந்தது. ஆனால் வித்யூலேகாவிற்கு கோமாளியாக வந்த மணிமேகலை “நான் இதை செய்ய மாட்டேன்” என கூறினார். போன சீசனில் மணிமேகலை வெந்நீரை தவறுதலாக காலில் ஊற்றி படுத்த படுக்கையானார் என்பதும் நாம் அறிந்ததே.
ஆதலால் அவருக்கு, அந்த பயம். ஒரு தருணத்தில் மணிமேகலை அழுதே விட்டது வித்யூலேகாவிற்கு வருத்தமாய் போனது. அட்வாண்டேஜ் டாஸ்க்கில் ரோஷினியும் அவரது கோமாளி பாலாவும் வெற்றி பெற்றனர். இந்நிலையில் இன்று யார் இம்யூனிட்டியை வெல்லப்போகிறார் என்று பொருத்திருந்து பார்க்கலாம்.