TELEVISION
“பாருங்க சார் எல்லாம் ஒரு ஜான் வயித்துக்காகத் தான் சார்”: சக்திமான் புகழை கலாய்த்து தள்ளிய ரக்சன்..
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தற்போது வெளிவந்த புரோமோவில் சக்தி மானாக வந்த புகழை வேற லெவலில் கலாய்த்துள்ளார் ரக்சன்.
தமிழ் நாட்டின் ஸ்ட்ரெஸ் பஸ்டரான “குக் வித் கோமாளி” சீசன் 3-ன் இந்த வார புரோமோக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இதில் வழக்கம் போல் கோமாளிகள் இந்த முறை பல வேடங்களில் வந்துள்ளனர்.
மேலும் புகழ் சக்தி மான் கெடப்பில் வந்துள்ளார். தற்போது வெளிவந்த புரோமோவில் ஒரு உண்டியலை கையில் வைத்து கொண்டு நடனம் ஆடுகிறார். அப்போது ரக்சன் “பாருங்க சார், எல்லாம் ஒரு ஜான் வயித்துக்காகத் தான் சார்” என கலாய்த்து தள்ளினார்.
நிகழ்ச்சியின் சென்ற வாரம் எலிமினேஷன் ரவுண்டாக அமைந்தது. அதில் சுட்டி அரவிந்த் எலிமினேட் ஆனார். அப்போது அனைவரும் கலங்கி இருந்தனர். மேலும் தாமு “அரவிந்த், நீங்க எப்போ வேணாலும் இந்த நிகழ்ச்சிக்கு வரலாம், இது உங்க ஷோ” என கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த வார புரோமோக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. வழக்கம் போல் இந்த வாரமும் கோமாளிகளின் சேட்டை படு பயங்கரமாக இருக்கப் போவதாக தெரிகிறது. ஒவ்வொரு கோமாளியும் கலகலப்பான கெட் அப்பில் வந்திருக்கிறார்கள். அதுவும் இந்த வாரம் புகழ் கலந்து கொண்டுள்ளார். ஆதலால் இன்னும் ஷ்பெசலாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
வைல்ட் கார்ட் என்ட்ரியான சுட்டி அரவிந்த் வெளியேறிய நிலையில், அதே வைல்ட் கார்டில் வந்த முத்துக்குமார் சென்ற வாரத்திற்கு முந்திய வாரம் Imminuty band வென்று கலக்கினார். இனி வரப்போகும் எபிசோடுகளில் யார் யார் எலிமினேட் ஆவார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.
