TELEVISION
வந்த வேகத்திலேயே மாஸ் காட்டும் முத்துக்குமார்; வேற லெவல் சம்பவம்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வைல்ட் கார்டாக அறிமுகமான சில வாரங்களிலேயே மாஸ் காட்டும் ஒரு செயலை செய்துள்ளார் முத்துக்குமார்.
தமிழ்நாட்டின் ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்று புகழப்படும் “குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சி கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் முத்துகுமார் மற்றும் சுட்டி அரவிந்த் ஆகியோர் வைல்ட் கார்டில் குக்குகளாக உள்ளே நுழைந்தனர் .
சுட்டி அரவிந்த் தன்னால் முடிந்த அளவில் சிறப்பாகவே தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தினார். அவரின் புல்லாங்குழல் வாசிப்பில் அங்கிருந்தவர்களின் இதயமே உருகியது. எனினும் கடந்த எலிமினேஷன் வாரத்தில் சுட்டி அரவிந்த் துர்திஷ்டவசமாக எலிமினேட் ஆனார்.
ஆனால் அதே வைல்ட் கார்டில் உள்ளே நுழைந்த முத்துக்குமார் சமையலில் மாஸ் காட்டுகிறார். அவர் சமைக்கும் உணவுகள் எல்லாமே நடுவர்களால் புகழ்ந்து தள்ளப்படுகிறது. அவர் வைல்ட் கார்டில் உள்ளே வந்த புதிதில் இம்யூனிட்டி வாரத்தில் சிறப்பாக சமைத்து இம்யூனிட்டுயை வென்றார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இம்யூனிட்டு வாரத்தில் முத்துக்குமார் இறுதி போட்டியில் மாம்பழத்தை வைத்து மஞ்சுரியன் ஒன்றை சமைத்தார். முத்துக்குமாரின் சமையலால் ஆச்சரியப்பட்டு போன நடுவர்கள், அதன் சுவையை கண்டு பாராட்டி தள்ளினர். அதன் பின் நடுவர்கள் முத்துக்குமாருக்கு இம்யூனிட்டி band-ஐ வழங்கினர். இதன் மூலம் வைல்ட் கார்டில் என்ட்ரியான முத்துக்குமார் இரண்டாவது முறை இம்யூனிட்டி band-ஐ தட்டி சென்று மாஸ் காட்டியுள்ளார்.
இனி வரும் எலிமினேஷன் வாரத்தில் அவர் சமைக்க தேவையில்லை. எனினும் கலகலப்பான நிகழ்ச்சியில் அடுத்தடுத்து மிகவும் கடுமையான போட்டிகள் இருக்கும் என்பதால் இனி வரும் வாரங்களில் யார் யார் வெளியேறப்போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
