HOLLYWOOD
BTS குழுவினருக்குள் பிளவு… ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல கொரியன் பாப் இசைக்குழுவான பிடிஎஸ் தனி தனிக்குழுக்களாக பிரிய உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட BTS கொரியன் பாப் குழு கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுவதிலும் பிரபலம் ஆனது. குறிப்பாக இந்தியாவில் BTS க்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. BTS குழுவினரின் பாடல் குறிப்பாக 2K kid-களுக்கு மிகவும் விருப்பமான பாடல்கள் ஆகும்.
BTS குழு ஜின், சுகா, ஜே ஹோப், வி, ஜுங்குக், ஜிமின், அர் எம் ஆகிய 7 பேர் கொண்ட குழு ஆகும். இக்குழுவை பங்டன் பாய்ஸ் குழு என்றும் அழைப்பர்.
இந்நிலையில் BTS குழு தனி தனியாக பிரியப்போவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
BTS குழு உலகம் முழுவதிலும் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வேற லெவல் ரீச் ஆன இசைக்குழு ஆகும். K-pop என அழைக்கப்படும் பல இசைக்குழுக்கள் இருந்தாலும் BTS உலகப்புகழ் பெற்றதாகும்.
K-pop குறித்த பல சுவாரசியமான மற்றும் வியக்கத்தக்க தகவல்கள் கூறப்படுகிறது. அதாவது K-pop க்கு என்றே தனி பயிற்சி மையம் உண்டு. அங்கே சேர வேண்டும் என்றால் பல கட்டுப்பாடுகள் இருக்கிறதாம்.
அதாவது அங்கே சேருபவர்களுக்கு உடல் நிலை கட்டுக்கோப்பாக Fit ஆக இருக்க வேண்டுமாம். அவர்கள் பல உணவு கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்க வேண்டுமாம். அந்த பயிற்சி மையத்தில் பாடல் பாடவும் சிறப்பாக நடனம் ஆடவும் கற்றுக் கொடுக்கப்படுமாம். அதற்கான தகுதி உடையவர்களை மட்டுமே K-pop-ல் சேர்த்துக் கொள்வார்களாம். கிட்டத்தட்ட ஒன்று முதல் எட்டு ஆண்டுகள் வரை பயிற்சி இருக்குமாம்.
மேலும் K pop-ல் இணைந்து விட்டால் Dating, காதல், திருமணம் என எந்த உறவிலும் ஈடுபடக்கூடாதாம். அதே போல் ஒரு K-pop இசை குழு சில ஆண்டுகளுக்கு பிறகு கலைக்கப்படுமாம். அதன் பின் அவர்கள் தென் கொரிய ராணுவத்தில் இணைய வேண்டுமாம். இவ்வாறு பல கட்டுப்பாடுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.