GOSSIPS
ஐயையோ.. நமக்கு அரசியலே வேண்டாம்.. தெறித்து ஓடிய “பைக்” நடிகர், சோகத்தில் இயக்குனர்…
ரவுடி இயக்குனர் எழுதிய கதையில் இடம்பெற்ற அந்த வசனங்களால் மீண்டும் கதையை மாற்றி அமைக்க சொல்லியிருக்கிறாராம் “பைக்” நடிகர்.
“ரவுடி” இயக்குனரின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அந்த காதல் திரைப்படம் ஓரளவு கலவையான விமர்சனங்களையே பெற்றது. எனினும் இத்திரைப்படத்தை தொடர்ந்து தற்போது “பைக்” நடிகரை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார்.
இத்திரைப்படத்தின் ஸ்கிரிப்டை ஏற்கனவே எழுதி வைத்திருந்த “ரவுடி” இயக்குனர், “பைக்” நடிகரிடம் அந்த ஸ்கிரிப்ட்டை கொடுத்தபோது சில மாற்றங்களை செய்ய சொல்லி அனுப்பிவிட்டிருக்கிறார் நடிகர். அதன் பின் மீண்டும் ஸ்கிரிப்டை கொஞ்சம் மாற்றி கொண்டு வர அதில் சில சர்ச்சைக்குரிய அரசியல் வசனங்கள் இடம்பெற்றிருந்ததாம்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர், இந்த வசனங்கள் எல்லாம் வேண்டாம் எனவும் இது பெரிய பிரச்சனையில் கொண்டு போய் முடியும் எனவும் கூறி மீண்டும் ஸ்கிரிப்டில் மாறுதல்களை செய்யச் சொல்லியிருக்கிறாராம்.
இதனால் அதிர்ச்சியடைந்த இயக்குனர் அந்த வசனங்கள் தான் படத்தின் கதைக்கே ஹார்ட் பீஸ் என சொல்ல, அதற்கு நடிகர் முடியவே முடியாது என சொல்லிவிட்டாராம். இதனால் மீண்டும் ஸ்கிரிப்ட்டில் மாறுதல் செய்ய வேண்டுமே என சோகத்தில் உள்ளாராம் இயக்குனர். அதை விட பெரிய சோகம் அவருக்கு என்னவென்றால் அந்த கதையில் ஹார்ட் பீஸே அந்த வசனங்கள் தான் என்பதால் இனி கதையையே மாற்ற வேண்டியதாக இருக்குமாம்.
ஆதலால் தற்போது தலையில் இடி விழுந்தது போல் அலைந்து கொண்டிருக்கிறாராம் அந்த இயக்குனர். இவ்வாறு கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.