TELEVISION
ரத்தத்தை எடுத்து facial செய்த ஜூலி… கேட்கவே பயங்கரமா இருக்கே..
தனது சொந்த ரத்தத்தை கொண்டே தனது முக அழகுக்கான சிகிச்சையை செய்துள்ளார் பிக் பாஸ் ஜூலி. என்ன விஷயம் தெரியுமா?
சில வருடங்களுக்கு முன் தமிழக இளைஞர்கள் பலரும் ஒன்று திரண்ட அந்த ஜல்லிக்கட்டு போரட்டத்தில் சிங்கப் பெண்ணாக தனது கம்பீர கர்ஜனையால் தனித்து தெரிந்தவர் ஜூலி. அப்போதெல்லாம் அனைத்து தொலைக்காட்சிகளிலும் சமூக ஊடகங்களிலும் ஜூலி தான் டிரெண்டிங்.
தமிழகமெங்கும் புரட்சி பெண்ணாக அறியப்பட்ட ஜூலி, திடீரென யாரும் எதிர்பார்க்காத விதமாக “பிக் பாஸ்” சீசன் 1 நிகழ்ச்சிக்குள் நுழைந்தார். அவர் அறிமுகமாகிய விதமே புரட்சி பெண்ணாக “வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும்” என்ற முழக்கத்தோடே தான் மேடை ஏறினார்.
அதன் பின் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஜூலி, காலப்போக்கில் அவர் நடத்தையால் இதற்கு முன் அவர் எடுத்த புரட்சி பெண், வீரப்பெண் என்ற பெயர்கள் எல்லாம் தலைகீழாகி போய் அவரை ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால் இது ஜூலிக்கு பின்னடைவாகச் செல்லவில்லை.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் பல திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் சமீபத்தில் “பிக் பாஸ் ஓடிடி” நிகழ்ச்சியிலும் தென்பட்டார்.
இந்நிலையில் தற்போது ஜூலி தனது ரத்தத்தை கொண்டே முக அழகு சிகிச்சை செய்த வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். Vampire Facial எனப்படும் இந்த சிகிச்சை முறையை கொண்டு தனது முக அழகை சீராக்கியுள்ளர் ஜூலி.
தற்போது அவர் Vampire Facial செய்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் பலரும் “இது என்ன புது விதமாக சிகிச்சை முறையாக இருக்கிறதே” என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.
View this post on Instagram
