TELEVISION
“நீங்க ஃபர்ஸ்ட் ஒழுங்கா இருங்க”.. கொதித்தெழுந்த பாரதி கண்ணம்மா வெண்பா!!
இன்ஸ்டா பக்கத்தில் கேள்வி கேட்ட ஒருவரிடம் கோபமாக கொந்தளித்து பேசியுள்ளார் பாரதி கண்ணம்மா ஃபரீனா.
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” தொடரில் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் ஃபரீனா. “பாரதி கண்ணம்மா” தொடரில் வில்லத்தனமான லுக்குடன் கண்ணம்மாவை எப்படி பழி வாங்குவது என திட்டம் தீட்டி கொண்டிருப்பார்.
அப்படி நாம் பார்த்த ஃபரீனா நிஜ வாழ்வில் ஒரு கண்ணியமான தாய். சமீபத்தில் தான் அவருக்கு மகன் பிறந்தார். தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வித விதமான கண்கவர் ஆடைகளுடன் எப்போதும் புகைப்படங்களை பகிர்ந்து வருபவர் ஃபரீனா.
இவர் வில்லி கதாப்பாத்திரத்தில் நடிப்பதால் பலரும் இவரிடம் “ஏன் இப்படி நடிக்கிறீர்கள்?”, “சீரியலில் இவ்வளவு மோசமான பெண்ணாக இருக்கிறீர்களே? என்பது போன்ற கேள்விகளை கேட்பார்கள். ஆனால் அதை எல்லாம் ஃபரீனா கண்டுக்கொள்வதே இல்லை. ஆனால் தற்போது ஃபரீனாவிடம் ஒருவர் ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு கொந்தளிக்கும் விதமாக பதிலடி கொடுக்கும் வகையில் பதிலை கூறியுள்ளார் ஃபரீனா. ஆம்!
அதாவது ஃபரீனாவின் இன்ஸ்டா பக்கத்தில் Q&A session-ல் ஒருவர் ஃபரீனாவிடம் “நீங்கள் முஸ்லீம் தானே. நமாஸ் பண்ணுவீர்கள் தானே? ஆனால் நீங்கள் மதத்திற்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கிறீர்களே? என கேட்டுள்ளார்.
அதற்கு தரமான பதிலடி கொடுக்கும் வகையில் ஃபரீனா “சமூக வலைத்தளம் பயன்படுத்துவது, டிவி சீரியல் பார்ப்பது, ஒரு பிரபலத்தை பின் தொடர்வது, அவரிடம் கேள்வி கேட்பது, இது எல்லாம் தான் மதத்திற்கு எதிரான முதன்மையான செயல்கள், முதலில் உங்களை சரிப்படுத்திக் கொண்டு பின்பு என்னிடம் கேள்வி கேளுங்கள்” என கூறியுள்ளார். இந்த துணிச்சலான பதிலை கூறிய ஃபரீனாவை பல ரசிகர்கள் பாரட்டி வருகின்றனர்.
