TELEVISION
“இது பீஸ்ட் பாவங்கள்”.. Fun by GO-SU…வேற லெவல் …
பரிதாபங்கள் கோபி-சுதாகரின் “பீஸ்ட்” பாவங்கள் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பரிதாபங்கள் கோபி சுதாகரை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தனது நகைச்சுவை உணர்வால் யூட்யூப்பையே கலக்கி கொண்டிருப்பவர்கள். அவர்களின் வீடியோக்கள் பார்வையாளர்களை வயிறு வலிக்க சிரிக்க வைப்பவை.
இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஏப்ரல் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “பீஸ்ட்”. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகிறார் என்றவுடன் ரசிகர்கள் இப்படத்திற்காக மிகுந்த உற்சாகத்தோடும் ஆரவரத்தோடும் பட வெளியீடுக்காக காத்திருந்தனர்.
ஆனால் ரசிகர்களுக்கு “பீஸ்ட்” பெரும் ஏமாற்றத்தை தந்தது. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு சென்ற ரசிகர்களின் முகங்கள் வாடிப்போனதை பார்த்திருப்போம். “நெல்சன் சொதப்பிட்டார்” “விஜய் ஏன் இப்படி ஒரே மாதிரியே” போன்ற விமர்சனங்களை ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.
தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து திரைப்படத்தின் வசூல் நன்றாகவே இருந்ததாக சில தகவல்கள் வந்தன. ஆனால் பெரும்பான்மையான விஜய் ரசிகர்களுக்கு இப்படம் ஏமாற்றத்தை தான் கொடுத்ததாக அறியப்படுகிறது.
மேலும் “பீஸ்ட்” திரைப்படம் வெளியான 30 நாட்களுக்குள்ளேயே நெட்ஃபிளிக்ஸில் வெளியானதும் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் ரசிகர்கள் சோகத்தை மறந்து கலகலப்பாக இருப்பதற்காக கோபி-சுதாகரை வைத்து நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் “பீஸ்ட்” பாவங்கள் என்ற ஒரு நகைச்சுவை வீடியோவை வெளியிட்டுள்ளது. கோபி சுதாகர் மட்டுமல்லாது பல சின்னத்திரை நடிகர்களும் இடம்பெறுகின்றனர். குறிப்பாக ஒரு சர்ப்ரைஸ் விசிட் ஆக ஜிபி முத்து வருகிறார். வேற லெவல் Fun.. “பீஸ்ட்” திரைப்படத்தால் நொந்து போன ரசிகர்களுக்கு “பீஸ்ட்” பாவங்கள் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது.