TELEVISION
ஷகீலாவை பங்கமாய் கலாய்த்து அசத்திய பாலா.. சிரிப்பலையில் நடுவர்கள்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஷகீலா போலவே செய்து காண்பித்து பங்கமாய் கலாய்த்தார் பாலா.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சென்ற வாரமான Celeberation week-ல் சீசன் 1 குக்குளில் பவித்ரா, கனி, ஷகீலா, தீபா, தமிழ் ரித்திகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதே போல் கோமாளிகள் குரேஷி, பாலா, புகழ், சுனிதா, சிவாங்கி, சீத்தல், அதிர்ச்சி அருண், சரத், சக்தி, தங்கதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். சென்ற வாரம் குக்குகளை கோமாளிகள் தேர்வு செய்ததால் பாலா ஷகீலாவை தனது குக்காக தேர்வு செய்தார்.
அப்போது அட்வாண்டேஜ் டாஸ்க்கில் ஷகீலா “பாலா என்னுடைய இடத்திலேயே இல்லை, மத்த டேபிளில் எல்லாம் சிறப்பா செய்தான்” என கூறினார். அப்போது பாலா, ஒரு சேரை எடுத்து போட்டு ஷகீலா சமைக்கும் போது என்னென்ன செய்தாரோ அதை எல்லாம் செய்து காண்பித்தார்.
தீபா எதுவும் செய்யாததால் ஷகீலா அவருக்கு தான் சமைத்ததை கொடுத்தார். அதை சுட்டிக் காடிய பாலா, “Already போகுது மானம், இதுல பின்னாடி கொடுக்குறது தானம்” என ரைமிங்காக கூறினார்.
இதனை கேட்ட அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். நடுவரில் ஒருவரான செஃப் தாமு, பாலா சிறப்பாக நகைச்சுவை செய்வதாக பாராட்டினார். தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
மெயின் டாஸ்க்கில் சிறப்பாக சமைத்த கனி மற்றும் தர்ஷன் ஆகியோர் ஃப்ரிட்ஜ் மட்டும் டிவிகளை பரிசாக பெற்றனர். இருவருக்கும் கோமாளிகளாக அமைந்த சீத்தல் மற்றும் சுனிதா ஆகியோர் மகிழ்ச்சியில் மூழ்கினர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடைசி கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்னும் சில வாரங்களில் Finale நடைபெற உள்ளது. எனினும் வழக்கம்போல் நிகழ்ச்சி கலகலப்பாகவே செல்கிறது.
