TELEVISION
பாக்கியலட்சுமியின் பெட்டிக்குள் இருந்த சர்ப்ரைஸ்… அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!!! வேற லெவல் திருப்பம்
பாக்கியலட்சுமி தொடரின் தற்போதைய புதிய புரோமோவில் அதிரடி திருப்பம் ஒன்று காட்டப்படுகிறது. பாக்கியாவின் பெட்டியை பிடுங்கி கோபி எறிகிறார். ஆனால் பெட்டிக்குள் என்ன இருந்தது தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியின் “பாக்கியலட்சுமி” தொடரில் ராதிகாவிற்கும் கோபிக்கும் இடையே உள்ள உறவு தெரிந்த பிறகு பாக்கியா வீட்டை விட்டு வெளியேறினார். பல நாட்களாக வீடு திரும்பாத பாக்கியா திடீரென வீடு திரும்பினார்.
கோபியை நீதிமன்றத்துக்கு அழைத்தார் பாக்கியா. அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் பாக்கியாவின் திறமையான பேச்சால் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கோபி பாக்கியாவை வீட்டை விட்டு வெளியேறும்படி கத்தினார். மேலும் “பாக்கியா இந்த வீட்டில் ஒரு வேலைக்காரியாகத் தான் இருந்தாள்” என அவமானப்படுத்தினார். இதனை தொடர்ந்து பாக்கியா அறைக்குச் சென்று பெட்டியை எடுத்துக்கொண்டு கீழே வந்தார்.
அவரை தடுத்த இனியா ““அப்பா தப்பு செய்ததுனால் என்னை விட்டுவிட்டு போக உனக்கு எப்படி மனது வந்தது?” என கேட்கிறார். அதற்கு பாக்கியா “உன்னை விட்டு போக வேண்டும் என்பது நான் எடுத்த முடிவு இல்லை. அப்படி ஒரு நெருக்கடிக்கு நான் தள்ளப்பட்டிருக்கிறேன்” என கூறினார்.
அப்போது கோபி “போதும் உன் டிராமா? இந்த குடும்பத்திற்கும் உனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என ஆகிப்போயிற்று. வீட்டை விட்டு கிளம்பு” என கத்தினார். இந்த நிலையில் தற்போது புதிய புரோமோ ஒன்று வெளிவந்துள்ளது.
அதில் கோபி பாக்கியா கையில் இருக்கும் பெட்டியை பிடுங்கி வீட்டிற்கு வெளியே எறிகிறார். அப்போது பெட்டி கீழே விழுந்து திறந்துவிட அனைவருக்கும் அதிர்ச்சி. அதாவது அந்த பெட்டியில் கோபியின் ஆடைகள் இருந்தன. அதனை தொடர்ந்து பாக்கியா கோபியை பார்த்து “என்னை வெளியே போ என்று கூறுவதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. எல்லா காலத்திலேயும் ஆண்கள் தப்பு செய்வீர்கள், பெண்கள் எந்த தப்பும் செய்யாமல் அழுதுகொண்டே ரோட்டில் நிற்கவேண்டுமா? நான் எங்கேயும் போகமாட்டேன். இது என் வீடு. நீங்க வெளில போங்க” என கத்தினார்.
ரசிகர்கள் பாக்கியாதான் வீட்டை விட்டு வெளியே போகிறார் என நினைத்துக்கொண்டிருக்கும்போது திடீர் திருப்பமாக பாக்கியா கோபியை வெளியே போக சென்னது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது தொடர் மீதான விறுவிறுப்பையும் அதிகரித்துள்ளது.