TELEVISION
“நீங்க நல்லா இருப்பீங்க”.. ராதிகாவை வாழ்த்திய பாக்கியலட்சுமி..
பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியாவுடன் ராதிகா கோபியின் விஷயத்தை குறித்து பேச தயங்க அதற்கு பாக்யா என்ன கூறினார் தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. பாக்கியலட்சுமியுடன் திருமண உறவில் இருக்கும் கோபி, ஒரு பக்கம் ராதிகாவுடன் தொடர்பிலும் இருக்கிறார்.
ராதிகாவும் பாக்கியலட்சுமியும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் தான். இருந்தாலும் கோபி தான் பாக்கியலட்சுமியின் கணவர் என ராதிகாவிற்கு தெரியாது. அதே போல் ராதிகா தன்னுடைய கணவரான கோபியைத் தான் காதலிக்கிறார் என பாக்கியாவிற்கும் தெரியாது.
இருவருக்கும் இந்த விஷயம் தெரிந்து விடக்கூடாது என கோபி பல முயற்சிகளை எடுத்து வந்தார். ஆனால் கோபி ராதிகாவைத் தான் காதலிக்கிறார். ராதிகாவிற்கு முன்னாள் கணவருடன் பிறந்த ஒரு பிள்ளையும் இருக்கிறது.
கோபி பாக்கியலட்சுமியை கழட்டிவிட்டு எப்படியாவது ராதிகாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முயற்சித்து வருகிறார். சமீபத்தில் ராதிகா கோபியின் குடும்பத்தை காண வேண்டும் என கோபியிடம் கேட்க அதற்கு கோபி மழுப்பி கொண்டே வந்தார். அதன் பின் போதையில் ராதிகாவிடம் பாக்கியாவுடன் தான் எடுத்த புகைப்படத்தை காட்டி விட்டார் கோபி. இதனால் ராதிகா அதிர்ச்சியில் மூழ்கினார்.
அதன் பின் கோபி பாக்கியலட்சுமியுடன் வாழும் தன்னுடைய வீட்டிற்கு போதையில் சென்றார். அப்போது கோபி “எனக்கு உங்க ரெண்டு பேரத் தான் பிடிக்கும். எனக்கு பாக்கியாவை பிடிக்காது” என உளறி கொட்டினார். இதை கேட்ட பாக்கியலட்சுமி அதிர்ந்து போனார்.
இந்நிலையில் தற்போது வெளிவந்த புரோமோவில் பாக்கியலட்சுமியிடம் ராதிகா தனது காதலர் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறுகிறார். அதற்கு பாக்கியலட்சுமி என்ன சொன்னார் என கேட்க. அவரே அதை பற்றி கூறினார் என கூற, அதற்கு பாக்கியா “அவரே அவரை பற்றி கூறுகிறார் என்றால், அவர் நல்லவராக இருக்க வாய்ப்பு இருக்கு” என கூறுகிறார்.
எனினும் பாக்கியலட்சுமியின் கணவர் தான் தன்னுடைய காதலன் என கூற ராதிகா தயக்கம் காட்டுவது போல் தெரிகிறது. இவ்வாறு விறுவிறுப்பாக செல்லும் தொடரில் பல திருப்பங்கள் வருகிறது. கோபியின் நிலைமை என்ன ஆகப்போகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.