TELEVISION
வீட்டை விட்டு வெளியேறிய பாக்கியலட்சுமி.. இனிமே அவர் ரூட்டே வேற…
பாக்கியலட்சுமி வீட்டை விட்டு வெளியேறியது போல ஒரு புரோமோ தற்போது வெளிவந்துள்ளது.
விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் “பாக்கியலட்சுமி” தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சில நாட்களுக்கு முன் தன்னுடைய கணவர் கோபி எந்த பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார்? என்று பாக்கியாவிற்கு தெரியாமல் இருந்த நிலையில், விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோபியை ராதிகா நலம் விசாரிக்க வந்ததை பாக்கியா பார்த்துவிட்டதில் இருந்து ராதிகா தான் கோபியின் காதலி என தெரிய வந்துவிட்டது.
மேலும் மருத்துவமனையில் ராதிகாவை தன் மனைவி என சொன்னது பாக்கியாவிற்கு இடி மேல் இடியாக விழுந்தது போல் இருந்தது. அதன் பின் அரண்டு போனது போல் வீட்டிற்கு மழையிலேயே நடந்து வந்தார்.
இதனை தொடர்ந்து கோபி உடல் நலம் தேறி வீட்டிற்கு வந்தார். அப்போது கோபியை தடுத்து நிறுத்திய பாக்கியா, ராதிகாவிற்கும் கோபிக்கும் இருக்கும் தொடர்பை பற்றி குடும்பத்திடம் போட்டு உடைத்து விட்டார். ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த தருணம் தற்போது வந்து விட்டது.
பாக்கியலட்சுமி எப்போதும் தனது கணவனை நம்பிக் கொண்டே இருந்தார். ஆனால் தனது கணவன் தன்னை ஏமாற்றுகிறார் என்று தெரிந்தவுடன் எரிமலை போல் கொந்தளித்தார்.
இந்நிலையில் தற்போது ஒரு புரோமோ வெளிவந்துள்ளது. அதில் பாக்கியலட்சுமி “நீங்கள் உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள். ஆனால் இனிமேல் நான் ஏமாளியாக முட்டாளாக இருக்க விரும்பவில்லை” என கோபியின் முகத்துக்கு நேராக கூறிவிட்டு பாக்கியலட்சுமி வீட்டை விட்டு வெளியே செல்வது போல் காட்டுகிறார்கள்.
இவ்வளவு நாள் பொறுமையாக இருந்த பாக்கியலட்சுமி தற்போது எரிமலையாய் வெடித்துள்ளார். இனி கோபி திருந்துவாரா? அப்படியே திருந்தினாலும் பாக்கியலட்சுமி அவரை ஏற்றுக் கொள்வாரா? என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.
