Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“இதனால தான் நான் 3 குழந்தை பெத்துக்கிட்டேன்”.. சர்ச்சை கேள்விக்கு சர்ச்சை பதில் அளித்த கோபி

TELEVISION

“இதனால தான் நான் 3 குழந்தை பெத்துக்கிட்டேன்”.. சர்ச்சை கேள்விக்கு சர்ச்சை பதில் அளித்த கோபி

“பாக்கியாவை பிடிக்கவில்லை என்றால் எப்படி மூன்று குழந்தை பெற்றீர்கள்? என்ற கேள்விக்கு கோபியாக நடித்த சதீஷ் குமார் சர்ச்சையான பதில் ஒன்றை கூறியுள்ளார்.

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் தற்போது திடீர் திருப்பமாக கோபிக்கு ஆக்சிடன்ட் ஆனது. அதனை தொடர்ந்து பாக்கியாவும், ராதிகாவும் ஒரே சமயத்தில் கோபியை பார்க்க மருத்துவமனைக்கு வந்தனர்.

அப்போது ராதிகா தன்னுடைய கணவரின் அறைக்குள் செல்வதை பார்த்து ஷாக் ஆகிவிட்டார் பாக்கியா. அந்த அறைக்குள் மெதுவாக நுழைந்த பாக்கியா அவர்கள் இருவரும் பேசுவதை அவர்களுக்கு தெரியாமல் கேட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது கோபி ராதிகாவின் கையை பிடித்துக் கொண்டு “நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது” என கூறினார். இதனை பார்த்த பாக்கியாவிற்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி ஆனது.

கோபிக்கு பாக்கியாவை சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனாலும் திருமணம் செய்து விட்டோமே என்ற கடமையில் வாழ்ந்து கொண்டிருக்க திடீரென தனது கல்லூரி காதலியான ராதிகாவை சந்திக்கிறார். அதன் பின் ராதிகாவிடம் பழகி வந்தார். தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து ராதிகாவை கரம் பிடிக்க நினைத்தார்.

ராதிகாவும் பாக்கியாவும் சிறந்த நண்பர்கள். ஒரு நாள் ராதிகாவிற்கு பாக்கியா தான் கோபியின் மனைவி என தெரிந்து விட கோபியை வெறுத்துக் கொண்டே வந்தார். பாக்கியாவிற்கு கோபி இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிந்திருந்தாலும் அது ராதிகா தான் என தெரியாது.

இந்த நிலையில் ராதிகா தனது தோழியான பாக்கியாவிற்கு துரோகம் செய்யக் கூடாது என நினைத்து மும்பைக்கு கிளம்ப தயாராவார். அந்த நேரத்தில் ராதிகாவின் முன்னாள் கணவர் கோபி வீட்டில் இல்லாத நேரத்தில் அவரின் வீட்டிற்கு சென்று உண்மையை உடைத்து விடுவார். இதனால் குழப்பம் ஏற்பட கோபியின் தாயார் அவரை தொலைப்பேசியில் அழைத்து உடனே வீட்டிற்கு வர வேண்டும் என கூற, அந்த ஷாக் தாங்க முடியாமல் கார் ஓட்டிக் கொண்டிருந்த கோபி ஒரு மரத்தில் சென்று இடித்து விபத்துக்குள்ளாகி விடுவார்.

கோபிக்கும் பாக்கியாவிற்கும் ஏற்கனவே மூன்று பிள்ளைகள் உண்டு. மூவருமே பெரியவர்கள். “பாக்கியலட்சுமி” தொடரில் கோபியாக நடித்து வரும் சதீஷின் சமூக வலைத்தளப் பக்கத்தில் “ஏன் இப்படி கெட்டவராக இருக்கிறீர்கள்” என ரசிகர்களிடம் இருந்து வசவுகள் வந்தன.

இது குறித்து பல நேரங்களில் சதீஷ் குமார் பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். இந்நிலையில் “பாக்கியாவை பிடிக்கவில்லை என்றால் ஏன் மூன்று குழந்தைகள் பெற்றீர்கள்?” என ஒரு சர்ச்சையாக கேள்விகள் எழுந்தன.

அதற்கு தற்போது சதீஷ் கோபியாகவே பதிலளித்துள்ளார். அதாவது “எனக்கும் பாக்கியாவிற்கு கல்யாணம் ஆகும்போது எனக்கு 23 வயது. 23 வயதில் நமக்கு பசி எடுக்கும். அந்த பசியால் தான் நான் 3 குழந்தைகள் பெற்றேன்” என சர்ச்சையாக பதில் அளித்துள்ளார்.

Continue Reading

More in TELEVISION

To Top