TELEVISION
“என்ன பாக்யா, Revenge ஆ?”… பாக்கியலட்சுமியின் வேற லெவல் டிரான்ஸ்ஃபர்மேஷன்
“வாங்க கோர்ட்டுக்கு போகலாம்”..கோபியை பழிவாங்கும் பாக்கியலட்சுமி.
பாக்கியலட்சுமி தொடரில் ராதிகாவிற்கும் கோபிக்கும் இடையேயான உறவை பற்றி பாக்கியாவிற்கு தெரிய வந்த பின் பாக்கியா வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பின் கோபியின் குடும்பத்தினர் பல முறை கூப்பிட்டும் பாக்கியா வீட்டிற்கு வரவில்லை.
இதனை தொடர்ந்து கோபி பாக்கியாவை சென்று சமாதானப்படுத்த சந்தித்தார். அப்போது “இனிமேல் ராதிகாவை பார்க்கமாட்டேன் என சத்தியம் செய்யுங்கள்” என பாக்கியா கூறினார். அப்போது கோபி வாய்த்தவறி பாக்கியாவிற்கு பதில் ராதிகா என கூறிவிட்டார். அதனை தொடர்ந்து பாக்கியா அவருக்கு கும்பிடு போட்டு வெளியே அனுப்பிவிட்டார்.
இந்நிலையில் தற்போது வீட்டிற்கு திரும்பிய பாக்கியா திடீரென அம்சமாக உடையணிந்து எங்கோ கிளம்பினார். அதனை பார்த்த குடும்பத்தினர் கோயிலுக்கு போகிறாயா? என கேட்டனர். அதற்கு பாக்கியா “இல்லை. இன்று கோர்ட்டுக்கு வரச்சொல்லி கடிதம் வந்திருக்கிறதே. அங்கே தான் போகிறேன்” என கூறினார்.
மேலும் கோபியை பார்த்து “போன முறை கோர்ட்டுக்கு சென்ற போது எத்தனை மணிக்கு அங்கே இருக்க வேண்டும் என சொன்னீர்கள்?” என அசால்ட்டாக கேட்டார். இதனை பார்த்த கோபி வெறுப்பாகி “என்ன திமிர் காட்டுறியா. என் மேல் ரிவஞ்ச் எடுக்கிறியா?” என கேட்டார்.
அதற்கு திமிராய் பதிலளித்த பாக்கியா “நான் எதை நம்பினேனோ, அது இல்லை என ஆன பின் இனி பேசுவதற்கு எதுவும் இல்லை” என கூறினார். தற்போது பாக்கியலட்சுமியின் இந்த ட்ரான்ஸ்ஃபர்மேஷன் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு முன் பாக்கியாவிடமிருந்து விவாகரத்து பெற பாக்கியாவிடம் பொய் கூறி அவரை கோர்ட்டுக்கு கோபி அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.