TELEVISION
ராதிகாவை மீண்டும் மடக்கிப்போடும் கோபி.. விடவே மாட்டார் போலயே..
ராதிகாவை சமாதானப்படுத்தி மீண்டும் மடக்கிப்போடும் முயற்சியில் இறங்கியுள்ளார் கோபி.
பாக்கியலட்சுமி தொடரில் கோபி-ராதிகாவின் உறவு தெரிந்த பிறகு கோபியிடம் எரிமலையாய் வெடித்த பாக்கியா, வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பின் கோபியின் குடும்பத்தினர் எவ்வளவோ அழைத்தும் பாக்கியா வீட்டிற்கு வரவில்லை.
இதனிடையே பாக்கியா ராதிகாவை அவரது வீட்டில் சென்று சந்தித்தார். அப்போது ராதிகா “நான் எனது குழந்தையின் மேல் சத்தியமாக செல்கிறேன். நீங்கள் தான் கோபியின் மனைவி என்று எனக்கு அப்போது தெரியாது. இந்த விஷயம் தெரிந்த பிறகு நான் இந்த ஊரில் இருக்கக்கூடாது என முடிவு செய்தேன்” என தனது நிலையை பாக்கிவிடம் கூறினார்.
அதன் பின் கோபியை சந்தித்த ராதிகா “நீங்கள் என்னை அடுத்தவர் கணவரை வசியப்படுத்தும் கெட்ட பெண்ணாக எல்லாரிடமும் காட்டிவிட்டீர்கள்” என கோபமாக கத்தினார். மேலும் “உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டது என எனக்கு தெரியும் தான். ஆனால் பாக்கியா தான் உங்களது மனைவி என தெரிந்திருந்தால் நான் அன்றே விலகியிருப்பேன்” எனவும் கூறினார்.
அதற்கு கோபி “அப்படி என்றால் பாக்கியா இல்லாமல் வேறொரு பெண்ணாக இருந்தால் உனக்கு சம்மதமா?” என கிடுக்குபிடி கேள்வி கேட்பது போல் கேட்டார்.
அதற்கு கொந்தளித்த ராதிகா “நீங்கள் என்னிடம் முதலில் உங்களது மனைவி உங்களை சரியாக கவனிக்கவில்லை. இருவருக்கும் பிடிக்கவில்லை. ஆதலால் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளோம் என்று தானே என்னிடம் பொய் சொன்னீர்கள்” என பதிலடி கொடுத்தார்.
ஆனால் எதற்கும் அசையாத கோபி ராதிகாவின் மனதை மாற்றும் விதமாக “இது எல்லாம் பழைய கதை. இதை அப்படியே விட்டுவிடுவோம். ஆனால் நீ என்னை நேசிப்பதும், நான் உன்னை நேசிப்பதும் உண்மை தானே” என வலை வீசும் வகையில் பேசினார்.
ராதிகாவின் மனதை மீண்டும் மாற்றி கோபி ராதிகாவை நேசிக்க வைத்துவிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.