GOSSIPS
துவண்டு போன “அவார்டு” நடிகைக்கு ஆறுதல் கூறிய “வில் அம்பு” நடிகர்…
துவண்டு போய் உட்கார்ந்திருந்த “அவார்டு” நடிகைக்கு ஆறுதல் கூறி தேற்றியுள்ளாராம் “வில் அம்பு” நடிகர். ஏன் தெரியுமா?
ஆரம்பத்தில் க்யூட் கேர்ளாக வலம் வந்த அந்த நடிகை ஒரு பிரபல நடிகையின் “biopic” –ல் நடித்ததற்கு “அவார்டு” வாங்கி மாஸ் காட்டினார். அதன் பின் அவருக்கு ஏறுமுகம் தான் என நினைத்தனர்.
ஆனால் அதன் பின் “அவார்டு” நடிகை நடித்த எந்த படமும் எடுபடவில்லை. அவார்டு வாங்கிய பிறகு வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன் பேர் வழி என்று ரசிகர்களை கடுப்பேத்தியது தான் மிச்சம்.
அதுவும் அல்லாமல் சமீபத்தில் ஓடிடியில் வெளியான ரத்தம் தெறிக்க தெறிக்க நடித்த “அவார்டு” நடிகைக்கு அத்திரைப்படமும் ஒன்னும் இல்லாமல் போயிற்று. ஒருவேளை பக்கத்து மாநிலத்தில் மாஸ் நடிகர்களின் படங்களில் நடித்து வருவதால் தமிழில் வித்தியாசமாக நடிக்கிறேன் என்று அருவை போடலாம் என முடிவெடுத்து விட்டாரோ என்று ரசிகர்கள் கேலி பேசி வருகின்றனர்.
இந்நிலையில் தனது படங்கள் எல்லாம் சொதப்பல் ஆகி வருகிறது என்ற சோகத்தில் உட்கார்ந்திருந்த “அவார்டு” நடிகைக்கு “வில் அம்பு” நடிகர் ஆறுதல் கூறியுள்ளாராம். அதாவது சமீபத்தில் “அவார்டு” நடிகை நடித்து ஓடிடியில் வெளிவந்த ரத்தம் தெறிக்க தெறிக்க நடித்த திரைப்படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளாராம் “வில் அம்பு” நடிகர்.
ஆதலால் “அவார்டு” நடிகை ஓரளவு தேறி வந்துள்ளாராம். “வில் அம்பு” நடிகருக்கு தற்போது பல படங்கள் கையில் இருக்கிறது, “அவார்டு” நடிகை ரத்தம் தெறிக்க தெறிக்க நடித்த அந்த திரைப்படத்தின் இயக்குனர் “வில் அம்பு” நடிகரை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் “அவார்டு” நடிகைக்கு “வில் அம்பு” நடிகர் ஆறுதல் கூறியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.