Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

பிரம்மாண்டத்தின் உச்சம்: வெளியானது அவதார் 2 டிரைலர்..

HOLLYWOOD

பிரம்மாண்டத்தின் உச்சம்: வெளியானது அவதார் 2 டிரைலர்..

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அவதார் 2 திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “அவதார்”. இத்திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இத்திரைப்படம் கிட்டத்தட்ட 280 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு “அவதார் 2; தி வே ஆஃப் வாட்டர்” திரைப்படம் உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. ஆதலால் உலகளவில் உள்ள சினிமா ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருந்தனர்.

இந்நிலையில் அவதார் 2 திரைப்படத்தின் பிரம்மாணட டிரைலர் வெளியாகியுள்ளது. வெறும் பிரம்மாண்டம் அல்ல , இது பிரம்மாண்டத்தின் உச்சம். டிரைலரில் கடலை மையமாக வைத்து கதையம்சம் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதுவும் கடலில் போர் காட்சிகள் இடம்பெறும் என தெரியவருகிறது. தன்னுடைய குடும்பத்தையோ அல்லது தனது இனக்குழுவையோ காப்பதற்கான கதாநாயகனின் போராட்டமே அவதார் 2 திரைப்படத்தின் கதைகருவாக இருக்கும் என வியூகிக்கப்படுகிறது.

இத்திரைப்படம் வருகிற டிசம்பர் 16 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. அவதாரில் இனி வரப்போகும் பாகங்கள் குறித்தான தகவல் ஒன்று வெளிவந்தது. அதாவது அவதார் இரண்டாம்  பாகமான “தி வே ஆஃப் வாட்டர்”-ஐ தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு “அவதார்: தி சீட் பியரர்” (The Seed Bearer), வெளியாகிறது. அதே போல் 2026 ஆம் ஆண்டு “அவதார்: தி டல்கன் ரைடர் (The Tulkun Rider) வெளியாகவுள்ளது.

மேலும் 2028 ஆம் ஆண்டு “அவதார்:தி குவிஸ்ட் ஆஃப் எய்வா” (The Quest of Eywa) வெளியாகிறது. இவ்வாறு 2028 வரை அவதார் பாகங்கள் வெளிவருவதற்கான திட்டங்களை வைத்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானாது. அவதார் 2 திரைப்படம் உலகமெங்கும் 160 மொழிகளில் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in HOLLYWOOD

To Top