Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

அமீர் பாவனி கழுத்துல தாலிய கட்டிட்டாரே.. என்னப்பா இது??

TELEVISION

அமீர் பாவனி கழுத்துல தாலிய கட்டிட்டாரே.. என்னப்பா இது??

அமீர், பாவனி கழுத்தில் திடீரென தாலி கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“பிக் பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சியில் நுழைந்த அமீர் இன்ட்ரோ ஆகும்போதே ஒரு நடனப் புயலாகத் தான் இன்ட்ரோ ஆனார். அதன் பின் கடைசி சுற்றுவரை வந்து, டாப் 5 கன்டெஸ்டன்ட்டாக திகழ்ந்தார்.

“பிக் பாஸ்” வீட்டுக்குள்ளே பாவனியுடன் நெருங்கி பழகி வந்தார் அமீர். பாவனிக்கு புரோபோஸும் செய்தார் அமீர். ஆனால் பாவனி ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் அமீருடன் நெருங்கிப் பழகுவதை பாவனி நிறுத்தவில்லை.

ஒரு முறை பாவனிக்கு அமீர் முத்தம் கொடுத்த சம்பவம் கூட நடந்தது. இதனை தொடர்ந்து அமீர்-பாவனி ஜோடி தற்போது “பிபி ஜோடிகள்” சீசன் 2 நிகழ்ச்சியில் நடனமாடி கலக்கி வருகிறார்கள்.

சென்ற வாரம் கூட பெண்கள் ஆண்களாகவும் ஆண்கள் பெண்களாகவும் வேடமிட்டு வந்தனர். அதில் அமீர் கிளாமர் உடையில் “தீப்பிடிக்க” பாடலுக்கு நடனமாடினார். அவருக்கு ஜோடியான பாவனி போக்கிரி விஜய் தோற்றத்தில் வந்தார்.

அமீர் கிளாமராக வந்து அதற்கேற்றார் போல் நடனமாடினார். இது பார்வையாளர்களையும் நடுவர்களையும் “ஓ” போட வைத்தது. நடுவர்கள் அமீரை சிறப்பாக நடனமாடினார் என பாராட்டினர்.

இதனை தொடர்ந்து “பிபி ஜோடிகள்” சீசன் 2 நிகழ்ச்சியின் இந்த வார புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் இந்த வாரம் Wedding round என அறியப்படுகிறது. இந்த நிலையில் பொண்ணு மாப்பிள்ளை போல் வந்திருந்தனர் அமீரும் பாவனியும். அப்போது திடீரென மணவறையில் பாவனியும் அமீரும் கழுத்தில் மாலையுடன் வந்து உட்கார திடீரென அமீர் பாவனி கழுத்தில் தாலியை கட்டிவிட்டார். இதனை பார்த்த பலரும் மணமக்களை ஆசீர்வதிப்பது போல் ஆசீர்வதித்தனர்.

அமீரும் பாவனியும் நெருங்கி பழகி வரும் நிலையில் திடீரென நடன நிகழ்ச்சிக்காக இவ்வாறு செய்தது மக்களை ஆச்சரியப்படுத்தினாலும் “அமீர்-பாவனி ஜோடி உண்மையில் ஜோடி சேர்ந்தால் அழகாக இருக்கும்” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

               

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in TELEVISION

To Top