Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

பள்ளி கால காதலர்களாக மாறிய அமீர்-பாவனி.. செம Couple..

TELEVISION

பள்ளி கால காதலர்களாக மாறிய அமீர்-பாவனி.. செம Couple..

பள்ளி கால காதலர்களாக மாறிய அமீர்-பாவனி ஜோடியின் நடனம் பார்வையாளர்களை கவர்ந்திழுத்துவிட்டது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட அமீர்-பாவனி ஜோடி தற்போது “பிபி ஜோடிகள்” சீசன் 2 நடன நிகழ்ச்சியில் ஜோடியாக கலக்கி வருகிறார்கள்.

சமீபத்தில் நடைபெற்ற “Wedding” ரவுண்டில் கல்யாண கோலத்தில் காட்சியளித்த அமீர்-பாவனி ஜோடி பார்வையாளர்களின் கண் திருஷ்டியை வாங்கிக்கொண்டு போனார்கள். அந்த அளவுக்கு பொருத்தமான ஜோடியாக ரசிகர்களின் மனதை கவர்ந்தனர். மேலும் நடனத்தின் ஒரு பகுதியாக அமீர் பாவனிக்கு தாலி கட்டியதை “பார்ப்பதற்கே கண் கோடி வேண்டும்” என ரசிகர்கள் பலரும் கூறினர்.

இதனை தொடர்ந்து சென்ற வாரம் நடைபெற்ற “பிபி ஜோடிகள்” சீசன் 2 நிகழ்ச்சியில் பள்ளி பருவ காதலர்களாகவே மாறி ஜோடியாக நடனமாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். பார்ப்பதற்கே மிகவும் க்யூட்டாக இருந்தது. இவர்களின் நடனம் நடுவர்களையும் கவர்ந்துவிட்டது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

“பிக் பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சியில் நுழைந்த அமீர் இன்ட்ரோ ஆகும்போதே ஒரு நடனப் புயலாகத் தான் இன்ட்ரோ ஆனார். அதன் பின் கடைசி சுற்றுவரை வந்து, டாப் 5 கன்டெஸ்டன்ட்டாக திகழ்ந்தார்.

“பிக் பாஸ்” வீட்டுக்குள்ளே பாவனியுடன் நெருங்கி பழகி வந்தார் அமீர். பாவனிக்கு புரோபோஸும் செய்தார் அமீர். ஆனால் பாவனி ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் அமீருடன் நெருங்கிப் பழகுவதை பாவனி நிறுத்தவில்லை.

ஒரு முறை பாவனிக்கு அமீர் முத்தம் கொடுத்த சம்பவம் கூட நடந்தது. இதனை தொடர்ந்து தான் தற்போது அமீர்-பாவனி ஜோடி “பிபி ஜோடிகள்” சீசன் 2 நிகழ்ச்சியில் நடனமாடி வருகிறார்கள்.

                 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in TELEVISION

To Top