TELEVISION
“பொண்ணு வேஷத்துல தக தக ன்னு மின்னுறாரே அமீர்”… வேற லெவல்
அமீர் பெண் வேடம் போட்டு கலக்கலாக நடனமாடியது பார்வையார்களை “ஓ” போட வைத்துள்ளது.
“பிக் பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சியில் நுழைந்த அமீர் இன்ட்ரோ ஆகும்போதே ஒரு நடனப் புயலாகத் தான் இன்ட்ரோ ஆனார். அதன் பின் கடைசி சுற்றுவரை வந்து, டாப் 5 கன்டெஸ்டன்ட்டாக திகழ்ந்தார்.
“பிக் பாஸ்” வீட்டுக்குள்ளே பாவனியுடன் நெருங்கி பழகி வந்தார் அமீர். பாவனிக்கு புரோபோஸும் செய்தார் அமீர். ஆனால் பாவனி ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் அமீருடன் நெருங்கிப் பழகுவதை பாவனி நிறுத்தவில்லை.
ஒரு முறை பாவனிக்கு அமீர் முத்தம் கொடுத்த சம்பவம் கூட நடந்தது. இதனை தொடர்ந்து அமீர்-பாவனி ஜோடி தற்போது “பிபி ஜோடிகள்” சீசன் 2 நிகழ்ச்சியில் நடனமாடி கலக்கி வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த வார புரோமோ வெளியாகியுள்ளது. இதில் பெண்கள் ஆண்களாகவும் ஆண்கள் பெண்களாகவும் வேடமிட்டு வருகிறார்கள். அதில் அமீர் கிளாமர் உடையில் “தீப்பிடிக்க” பாடலுக்கு நடனமாடுகிறார். அவருக்கு ஜோடியான பாவனி போக்கிரி விஜய் தோற்றத்தில் வருகிறார்.
அமீர் கிளாமராக வந்து அதற்கேற்றார் போல் நடனமாடுகிறார். இது பார்வையாளர்களையும் நடுவர்களையும் “ஓ” போட வைக்கிறது. நடுவர்கள் அமீரை சிறப்பாக நடனமாடினார் என பாராட்டுகின்றனர்.
அதன் பின் அமீரிடம் விஜய் கெட் அப்பில் இருக்கும் பாவனி “நீ என்ன செய்தாலும் உன் கிட்ட நான் விழமாட்டேன், ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேட்கமாட்டேன்” என கூறுகிறார். இது கலகலப்பாக இருக்கிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமீர் பாவனியை அசத்தும் விதமாக புரோபோஸ் செய்தார். கையில் மோதிரத்துடன் பாவனிக்கு அமீர் புரோபோஸ் செய்தது அனைவரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.