TELEVISION
“மனமுறிவு தான் வாழ்க்கையின் சிறந்த பாடம்”.. சாமியாராக மாறிய அமலா பால்..
மனமுறிவு தான் வாழ்க்கையின் சிறந்த பாடம் என மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார் அமலா பால். ஏன் தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் “பிபி ஜோடிகள்” சீசன் 2 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ராஜூ தற்போது “ராஜூ வூட்ல பார்ட்டி” என்ற கலகலப்பான ஷோ ஒன்றை நடத்தி வருகிறார்.
அதில் இந்த வாரம் நம் மனங்களை கொள்ளை கொண்ட அமலா பால் கலந்து கொண்டார். அதில் விஜய் டிவி நட்சத்திரங்களுடன் அமலா பால் கலகலப்பாக பேசியது ரசிகர்களை மகிழ்வித்தது.
இந்நிலையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜூ ஜெயமோகன் அமலா பாலிடம் “நாம் வாழ்க்கையில் சிலரை காதலித்திருப்போம். அவருடன் காதல் நல்ல படியாக போய்க்கொண்டிருக்கும் போது அவரின் குணம் தெரிந்து இவருக்கு தெரியாத்தனமாக புரோபோஸ் செய்துவிட்டோமே என்பது போல் எதாவது நடந்தது உண்டா?” என கேட்டார்.
அதற்கு பதிலளித்த அமலா பால் “ஒருவருடன் காதலில் இருக்கும் போது தொடக்கத்தில் அந்த காதல் சரிவராது என நினைக்க மாட்டேன். நமக்கு செட் ஆகாதது எதுவோ அதனை சகித்துக் கொள்வேன். ஆனால் போக போக எனக்கு தெரியவரும் நாம் விரும்புபவரை மாற்ற முடியாது என்று. நாம் நாமாகவே இருக்க வேண்டும், அதே போல் மற்றவரை பிடிக்க வேண்டும். அந்த உறவு தான் வெகு நாட்கள் தொடரும்” என கூறினார்.
அதன் பின் மேலும் பேசிய அமலா பால் “ஆனால் நான் கூறுவேன். மனமுறிவு தான் நமது வாழ்க்கையின் மிகப்பெரிய பாடம் என்று” என வாழ்க்கையின் தத்துவமாக அதனை கூறினார். அமலா பால் பேசிய அந்த நிகழ்வு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
