TELEVISION
“Weight போட்டா குறைச்சிக்கலாம்” .. ரசிகருக்கு நக்கலாக பதில் சொன்ன ஆல்யா மானசா
சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நக்கலாக பதில் அளித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ராஜா ராணி” தொடரில் செம்பா என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் நம் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் ஆல்யா மானசா. இவருக்கும் அதே தொடரில் நடித்த சஞ்சீவுக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இந்த தம்பதியினருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பிற்கு பின் தனது உடலை பழையபடி மெருகேற்றி மீண்டும் “ராஜா ராணி” இரண்டாம் பாகத்தில் நடிக்க தொடங்கினார்.
இதனிடையே மீண்டும் அவர் கர்ப்பம் ஆக சமீபத்தில் இரண்டாவது குழந்தை பிறந்தது. இந்நிலையில் ஆல்யா மனசா படப்பிடிப்பை எல்லாம் தள்ளி வைத்து விட்டு தற்போது முழு நேரம் தனது குழந்தையை நல்ல படியாக பார்த்துக் கொள்ளும் தாயாக இருக்கிறார்.
இதனிடையே நேற்று தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ரசிகர்களை எந்த கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம் என கூறியிருந்தார். அதனை தொடர்ந்து ரசிகர் ஒருவர் “உங்களது தினசரி Routine என்ன? குறிப்பாக உங்கள் Diet என்ன? என கேட்டிருந்தார்.
அதற்கு பதில் அளித்த ஆல்யா மானசா “இப்போது நான் நன்றாக சாப்பிட்டு வருகிறேன். படப்பிடிப்பு தொடங்கி விட்டால் மீண்டும் diet எடுக்க வேண்டியது வரும். ஆதலால் நான் தற்போது எனது motherhood நாட்களில் எனது குழந்தையை நன்றாக பார்த்துக் கொண்டும் எனக்கு பிடித்தமான உணவுகளை சாப்பிட்டு கொண்டும் வருகிறேன்” என கூறினார்.
மேலும் அவர் “வெயிட் போட்டா குறைச்சிக்கலாம்” என கூறி Tongue out Smiley ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
