HOLLYWOOD
“ஆர் ஆர் ஆர் நடிகையுடன் வொண்டர் உமன்”.. வைரல் புகைப்படம்
“ஆர் ஆர் ஆர்” திரைப்படத்தில் நடித்த கதாநாயகி தற்போது வொண்டர் உமன் நடிகையுடன் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
“ஆர் ஆர் ஆர்” திரைப்படம் மூலம் நமது உள்ளங்களை கொள்ளை கொண்டவர் ஆலியா பட். இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர். இவர் சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் ஆலியா பட் ஹாலிவுட்டில் ஒரு திரைப்படத்தில் அறிமுகமாக உள்ளார். அத்திரைப்படத்தின் பெயர் “ஹார்ட் ஆஃப் ஸ்டோன்”. இதில் ஆலியா பட் ஹாலிவுட்டின் டாப் மோஸ்ட் நடிகையான “வொண்டர் உமன்” புகழ் கேல் கடோட்டுடன் நடிக்கிறார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஆலியா பட் கலந்து கொண்டார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆனது. படப்பிடிப்பு போர்டிகல் நாட்டில் ஒரு பாலைவனத்தில் நடப்பதாக தெரிய வருகிறது. அதில் ஆலியா பட் கையில் ஒரு துப்பாக்கியுடன் மாஸாக காட்சி தருகிறார்.
மேலும் சில படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளிவந்தது. இதனை தொடர்ந்து ஆலியா பட் தனது டிவிட்டர் பக்கத்தில் கேல் கடோட்டுடன் தான் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
Heart of Stone – you have my wholeeeeeee heart ❤️❤️❤️ Thank you to the beautiful @GalGadot.. my director Tom Harper … #JamieDornan missed you today.. and WHOLE team for the unforgettable experience. pic.twitter.com/wYyDI8sO53
— Alia Bhatt (@aliaa08) July 8, 2022
அதில் “கேல் கடோட்டுக்கு நன்றி. என்னுடைய இயக்குனருக்கும் மொத்த படக்குழுவிற்கும் இந்த மறக்க முடியாத அனுபவத்தை தந்ததற்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
நடிகை கேல் கடோட்டுக்கு இந்தியாவில் ஒரு தனி ரசிகர் கூட்டமே உண்டு. அவருடன் ஆலியா பட் இணைந்து ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்ற செய்தி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
