GOSSIPS
“பகல்” நடிகருக்கு பல்பு கொடுத்த “அகோரி” இயக்குனர்..
“பகல்” நடிகருக்கே பல்பு கொடுத்து சோகத்தில் ஆழ்த்தியுள்ளாராம் அந்த “அகோரி” டைரக்டர், என்ன நடந்தது?
“பகல்” நடிகர் சமீபத்தில் கூட “குழப்ப” நடிகரின் படத்தில் கேமியோ ரோல் செய்து மாஸ் காட்டினார். அவர் ஹீரோவாக நடிக்கும் போது கூட இந்த அளவு ரெஸ்பான்ஸ் வரவில்லை. ஆனால் அந்த படத்தில் அவர் செய்த கேமியோ ரோல் வெற லெவலில் அசத்தியது. இதனை தொடர்ந்து “குழப்ப” நடிகர் “பகல்” நடிகருக்கு விலை உயர்ந்த பரிசை கொடுத்து அன்பு பாரட்டினார்.
அதனை தொடர்ந்து அகோரி படம் எடுத்து ஃபேம்ஸ் ஆன “அகோரி” இயக்குனரின் இயக்கத்தில் “பகல்” நடிகர் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கூட நின்று போனதாக சில மாதங்களுக்கு முன்பு வதந்தி பரவியது. ஆனால் அது உண்மை இல்லை என அதன் பின் தெரிய வந்தது.
எனினும் “பகல்” நடிகருக்கும் “அகோரி” இயக்குனருக்கும் வேறு ஒரு விஷயத்தில் பெரும் விவகாரம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. “அகோரி” இயக்குனர் இயக்கி வரும் திரைப்படத்தை “பகல்” நடிகர் தான் தயாரிக்கவும் செய்கிறார்.
இந்நிலையில் “அகோரி” இயக்குனர் “பகல்” நடிகரிடம் ஒரு வீட்டுக்குள் நடப்பது போன்ற சில காட்சிகளை எடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார். அதற்கு “பகல்” நடிகர் செட் போட்டுவிடலாம் என கூற, அதனை மறுத்து தனக்கு ஒரு ஒரிஜினல் வீடே வேண்டும் என கேட்டிருக்கிறாராம்.
எனினும் “பகல்” நடிகர் இதற்காகவே ஒரு வீட்டை புதிதாக வாங்கியுள்ளாராம். ஆனால் இது வரை அந்த வீட்டில் ஒரு காட்சி கூட எடுக்கவில்லையாம். அதே போல் படத்தின் பட்ஜெட் இவ்வளவு தான் என முடிவெடுக்கப்பட்ட நிலையில் இயக்குனர் இன்னும் பட்ஜெட் வேண்டும் என நீட்டிக் கொண்டே போகிறாராம். இதனால் “அகோரி” இயக்குனர் மேல் “பகல்” நடிகர் செம காண்டில் இருக்கிறார் என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றனது.