TELEVISION
சிம்புவை காதலித்த நடிகை மருத்துவமனையில் அனுமதி??
சிம்புவை தான் காதலிப்பதாக கூறிவந்த சின்னத் திரை நடிகை மனநல சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
“யாரடி நீ மோகினி”, “புது புது அர்த்தங்கள்” போன்ற சின்னத்திரை தொடர்களின் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்தவர் ஸ்ரீநிதி. இவர் சமீப காலமாக சிம்புவை காதலித்து வருவதாக கூறி வந்தார்.
இதனிடையே ஒரு நாள் ஸ்ரீநிதி சிம்புவுடன் பேசிய வீடியோ கால் ரெக்கார்டிங்க் ஒன்றை மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் சிம்புவுடன் எடுத்த புகைப்படங்களையும் பதிவேற்றி வந்தார்.
இவ்வாறு நிலைமை போய் கொண்டிருந்த நிலையில் ஒரு நாள் சிம்பு வீட்டின் முன் அவரை காதலித்து வருவதாகவும் அவரை தனக்கு திருமணம் செய்து வைக்க கோரியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து ஸ்ரீநிதி பல பேட்டிகளில் தனக்கு மன அழுத்தம் இருப்பதாக கூறி வந்தார். மேலும் நடிகை நக்சத்ரா திருமணம் செய்து கொள்ளும் நபரை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவந்தார். இது குறித்து நடிகை நக்சத்ராவும் ஸ்ரீநிதிக்கு மன அழுத்த பிரச்சனை இருப்பதால் தான் இவ்வாறு பேசுகிறார் என கூறி வந்தார்.
இந்நிலையில் நடிகை ஸ்ரீநிதி தனது மன நல சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்ரீநிதிக்கு மருத்துவமனையில் தகுந்த மன நல மருத்துவர்களால் கவுன்சிலிங் தரப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீநிதி நடிகர் சிம்புவின் தீவிர ரசிகர். தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் சிம்புவை பற்றியே பேசிக் கொண்டிருப்பார். இதனை பார்த்து நெட்டிசன்களும் சிம்புவும் ஸ்ரீநிதியும் காதலிக்கிறார்கள் என வதந்தியை பரப்பி வந்தனர். ஆனால் இது குறித்தெல்லாம் நடிகர் சிம்பு கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.