TELEVISION
பாக்கியலட்சுமியில் திடீர் திருப்பம்..? கோபிக்கு விவாகரத்து கொடுத்த நீதிமன்றம்..
பாக்கியலட்சுமி தொடரில் திடீர் திருப்பமாக பாக்கியா-கோபி தம்பதியினருக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்
பாக்கியலட்சுமி தொடரில் ராதிகாவிற்கும் கோபிக்கும் இடையேயான உறவை பற்றி பாக்கியாவிற்கு தெரிய வந்த பின் பாக்கியா வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பின் கோபியின் குடும்பத்தினர் பல முறை கூப்பிட்டும் பாக்கியா வீட்டிற்கு வரவில்லை.
இதனை தொடர்ந்து கோபி பாக்கியாவை சென்று சமாதானப்படுத்த அவரை சந்தித்தார். அப்போது “இனிமேல் ராதிகாவை பார்க்கமாட்டேன் என சத்தியம் செய்யுங்கள்” என பாக்கியா கூறினார். அப்போது கோபி வாய்த்தவறி பாக்கியாவிற்கு பதில் ராதிகா என கூறிவிட்டார். அதனை தொடர்ந்து பாக்கியா அவருக்கு கும்பிடு போட்டு வெளியே அனுப்பிவிட்டார்.
திடீரென வீட்டிற்கு திரும்பிய பாக்கியா கோர்ட்டுக்கு கிளம்பினார். தற்போது ஒரு புதிய புரோமோ வெளிவந்துள்ளது. அதில் பாக்கியா-கோபி இருவரும் நீதிமன்றத்தில் நீதிபதி முன் நிற்கின்றனர்.
நீதிபதி அவர்களிடம் “கவுன்சிலிங் செல்கிறீர்களா?” என கேட்கிறார். அதற்கு பாக்கியா “இல்லை மேடம், அவர் கேட்டபடி நான் டைவர்ஸ் கொடுக்கிறேன்” என கூறுகிறார்.
அதற்கு நீதிபதி “ஆண்கள் எளிதாக சொல்லிவிடுவார்கள். நீங்கள் நன்றாக யோசித்து தான் முடிவெடுத்துள்ளீர்களா?” என பாக்கியாவிடம் கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் பாக்கியா “என்ன தான் கணவன் மனைவி உறவாக இருந்தாலும் ஒருவரை அண்டி பிழைப்பது மிகப்பெரிய அவமானம். தன்னம்பிக்கையும், சுய மரியாதையும் உள்ள யாராக இருந்தாலும் இங்கே பிழைப்பதற்கு ஆயிரம் வழி இருக்கிறது” என கூறுகிறார்.
இதனை கேட்கும் நீதிபதி “நீங்கள் தெளிவாக யோசித்து தான் முடிவெடுத்திருக்கிறீர்கள் என தோன்றுகிறது. உங்கள் இருவருக்கும் இந்த நீதிமன்றம் விவாகரத்து வழங்க உத்தரவிடுகிறது” என கூறுகிறார். யாரும் எதிர்பார்க்காத இந்த தருணம் தற்போது வந்துள்ளது. இனி என்ன ஆகும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.
