TELEVISION
நடு ரோட்டில் இப்படி ஒரு குத்தாட்டமா??.. VJ பிரியங்காவின் சேட்டையை பாருங்க..
VJ பிரியங்கா வெளிநாட்டில் நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளுக்கு பிரியங்கா தொகுப்பாளராக இருந்து வருகிறார். இப்போதும் அவரை அடிச்சிக்க ஆள் இல்லை. தொகுப்பாளராக மட்டும் அல்லாமல் சில மாதங்களுக்கு முன்பு “பிக் பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
அதில் எல்லாருக்கும் கட்டிப் பிடி வைத்தியம் செய்து கொண்டிருந்தார். சக கன்டஸ்டுகளை அன்பினால் சொக்க வைத்தார். மேலும் சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் எமோஷனல் ஆனார்.
அவரும் ராஜூ ஜெயமோகனும் சேர்ந்தால் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது. ராஜூவை அவர் “ஹே கோபால்” என கூறுவது மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்க வாரத்தில் அபிஷேக்குடனும் நிரூப்புடனும் மிகவும் நெருக்கமாக பழகினார்.
அபிஷேக் வெளியேற்றப்பட்ட போது பெரிதும் கலங்கினார். அதன் பின் தாமரை, பாவனி ஆகியோருடன் மிகவும் நெருக்கமாக பழகினார். தாமரையுடன் அடிக்கடி சண்டையும் போட்டார். ஆனால் தாமரையை விட்டுக்கொடுக்காமல் பேசினார். குறிப்பாக எப்போதும் எதாவது சாப்பிட்டுக்கொண்டே இருந்தார். ஒரு முறை பீட்சாவுக்காக டாஸ்க்கை பாதியிலேயே விட்டு வெளிவந்தது பலரையும் ரசிக்கவைத்தது.
VJ பிரியங்கா தற்போது கனடா நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கே நடு ரோட்டில் குத்தாட்டம் போட்ட பிரியங்கா அதனை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram
பிரியங்கா தற்போது “பிபி ஜோடிகள் சீசன் 2” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் “ராஜூ வூட்ல பார்ட்டி” என்ற புத்தம் புதிய நிகழ்ச்சியிலும் பங்குபெற்று வருகிறார்.
