Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“விக்ரம்” திரைப்படம் எப்படி இருக்கு? ஆடியன்ஸ் என்ன சொல்றாங்க??

REVIEW

“விக்ரம்” திரைப்படம் எப்படி இருக்கு? ஆடியன்ஸ் என்ன சொல்றாங்க??

“விக்ரம்” திரைப்படம் குறித்து பார்வையாளர்கள் பலர் தங்கள் விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர்.

கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் உருவான “விக்ரம்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளிவந்துள்ளது. காலை 4 மணி காட்சிக்கே ரசிகர்களின் கூட்டத்தால் திரையரங்கங்கள் திருவிழா போல் காட்சி தந்தன.

மேலும் 4 மணி காட்சி பார்த்தவர்களின் விமர்சங்களும் பாராட்டுகளும் இணையத்தில் குவிந்து வருகின்றன. ஒருவர் “சூர்யாவின் என்ட்ரி வேற லெவலில் உள்ளது” என்கிறார்.

மற்றொருவர் “செகண்ட் ஆஃப் தூள் பறக்குது” என பகிர்ந்துள்ளார்.

இன்னொருவர் “விக்ரம் masterpiece” என பகிர்ந்து மூன்று fire விட்டிருக்கிறார்.

மற்றொருவர் “ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் விக்ரம் பிளாக் பஸ்டர்” என பாராட்டியுள்ளார்.

ஒருவர் “இந்த மாதிரி சூர்யா என்ட்ரிய நான் பார்த்தே இல்லை. வெறித்தனம் என பதிவிட்டுள்ளார்.

ஒருவர் “இது போன்ற ஒரு சினிமா எக்ஸ்பிரீயன்ஸை நான் இது வரையில் பார்த்ததே இல்லை. எத்தனை தடவை வேண்டுமானாலும் விக்ரம் திரைப்படத்தை பார்க்கலாம்” என பாராட்டியுள்ளார்.

ஒருவர் “விக்ரம் தரமான சம்பவம்” என fire விட்டிருக்கிறார்.

இவ்வாறு பல ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

 

Continue Reading

More in REVIEW

To Top