HOLLYWOOD
சூப்பர் ஹீரோவின் நிர்வாணப் படத்தை மீண்டும் மீண்டும் பார்த்த ரசிகர்கள்…
மார்வெல் சூப்பர் ஹீரோ தோரின் நிர்வாண காட்சியை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் ரீவைண்ட் செய்து பார்த்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன
மார்வெல் திரைப்பட வரிசையில் தற்போது பல சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் கூட “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்; மல்டி வெர்ஸ் ஆஃப் மேட்ன்ஸ்” திரைப்படம் வெளியாகி சக்கை போடு போட்டது.
இந்நிலையில் சமீபத்தில் “தோர்; லவ் அண்ட் தண்டர்” என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளிவந்தது. மார்வல் சூப்பர் ஹீரோக்களில் ஐயர்ன் மேன், ஸ்பைடர்மேன், ஹல்க் ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்கள் கொண்ட கதாப்பாத்திரம் என்றால் தோர் கதாப்பாத்திரத்தை கூறலாம்.
ஆஸ்கார்டு என்ற வேற்று உலகத்தைச் சேர்ந்த தோரின் சுத்தில் அக்கதாப்பாத்திரத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. அதனை தோரால் மட்டுமே தூக்க முடியும். எனினும் “அவெஞ்சர்ஸ்; என்ட் கேம்” திரைப்படத்தில் கேப்டன் அமெரிக்காவின் கைகளுக்கு தாராளமாக அநத சுத்தில் சென்று சேரும்.
மேலும் அத்திரைப்படத்தில் தோர் மிகவும் குண்டாக இருப்பார். இந்நிலையில் தனது உடலை மீண்டும் சிக்கென ஆக்கி “தோர்; லவ் அண்ட் தண்டர்” திரைப்படத்தில் காட்சி தருகிறார். இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
அதில் தோருடன் சேர்ந்து அவரது முன்னாள் காதலியும் சூப்பர் ஹீரோவாக இணைகிறார். இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் டிரைலரில் இறுதியாக தர்ம சங்கடமான நிலைமையில் தோரின் ஆடைகள் அவிழ்க்கப்படும். தோர் நிர்வாணமாக நின்றபடி காட்சியளிப்பார். அப்போது அதனை பார்த்து பலரும் மயங்கி விழுவர்.
டிரைலரில் இக்காட்சியை மட்டும் பார்வையாளர்கள் மீண்டும் மீண்டும் ரீவைண்ட் செய்து அதிகமுறை பார்த்ததாக Youtube Data குறிப்பிடுவதாக ஹாலிவுட் செய்திகள் பல தெறிவிக்கின்றன. இத்திரைப்படத்தில் தோராக கிரிஸ் ஹெம்ஸ்வொர்த்தும், அவரின் முன்னாள் காதலி ஜேன் ஆக நடாலி போர்ட்மேன்னும் வழக்கம்போல் தோன்றுகின்றனர். எனினும் ஹாலிவுட்டின் பிரபலாமான நடிகர் கிரிஸ்டியன் பேல் இத்திரைப்படத்தில் கோர் தி காட் பட்சர் என்ற கதாப்பாத்திரத்தில் சூப்பர் வில்லனாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
