TELEVISION
கடற்கரையில் அரை டிரவுசருடன் தொடை தெரிய ஆடும் ராதிகா.. வைரல் வீடியோ
பாக்கியலட்சுமி நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி கடற்கரையில் டாப் கிளாமராக நடனமாடும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த விடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளைகொண்ட “பாக்கியலட்சுமி” தொடரில் ரேஷ்மா, ராதிகா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இந்த தொடரில் ராதிகா, தனது காதலரான கோபியின் மனைவி தனது தோழி பாக்கியா தான் என்பதை தெரிந்துகொண்ட பின் கோபியை வெறுத்தே வந்தார்.
அதன் பின் இவர்களின் உறவு தெரிந்த பிறகு கோர்ட் வாசலை மிதித்து டைவர்ஸூம் வாங்கினார் பாக்கியா. அதன் பின் கோபியை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார் பாக்கியா. தற்போது கோபி ராதிகாவின் மனதை மாற்ற முயற்சி செய்து வருகிறார். இவ்வாறு எதிர்பாராத சம்பவங்கள் சமீப வாரங்களாக நடந்துகொண்டிருக்கிறது.
ராதிகா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ரேஷ்மா, ஒரு மாடல் கியூன். யார் என்ன சொல்வார்கள் என்ற கவலை எல்லாம் இல்லாமல் ஜாலியாகவும் சிங்கிளாகவும் சுற்றிக்கொண்டிருக்கிறார். நடிகைகளையே தூக்கி சாப்பிடும் வகையில் டாப் கிளாமராக உடையணிபவர் ரேஷ்மா.
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பாங்காக் கடற்கரையில் அரை குறை ஆடையுடன் ஜாலியாக நடனமாடிய வீடியோவை ரேஷ்மா தற்போது பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram
ரேஷ்மா பசுப்புலேட்டி “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இது மிகவும் பிரபலமான கதாப்பாத்திரம் ஆகும். மேலும் அவர் “மசாலா படம்”, “கோ 2”, “பேய் மாமா” போன்ற பல திரைப்படங்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
