CINEMA
“நான் இந்தியாவை நேசிக்கிறேன்.. ஆனால்”.. அரசுக்கு எதிராக களமிறங்கிய பிசி ஸ்ரீராம்?
பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிரபல ஒளிப்பதிவாளரான பிசி ஸ்ரீராம் இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். குறிப்பாக மணி ரத்னம் இயக்கிய பல திரைப்படங்களில் இவர் பணியாற்றியுள்ளார். இவரின் ஒளிப்பதிவு மிகவும் தனித்துவமான ஒன்று. இவர் பணியாற்றும் திரைப்படங்களை பார்த்தவுடனே “இதற்கு பிசி ஸ்ரீராம் தான் ஒளிப்பதிவு செய்துள்ளார்” என கண்டுபிடித்துவிடலாம். அந்த அளவுக்கு ஒரு தனி பாணியை கையாள்பவர் இவர்.
இந்த நிலையில் பிசி ஸ்ரீராம் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் “நான் எனது நாட்டை நேசிக்கிறேன். ஆனால் அரசாங்கத்தை அல்ல, ஜெய் ஹிந்த்” என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இணையத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.
I love my country but not the government.
Jaihind— pcsreeramISC (@pcsreeram) August 15, 2022
இன்று இந்தியா சுதந்திரம் பெற்று 75 வருடங்களை நிறைவு செய்கிறது. இதனை முன்னிட்டு சமீபத்தில் “மன் கீ பாத்” நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றவேண்டும் எனவும், சமூக வலைத்தளப் பக்கத்தில் தேசிய கொடியை DP ஆக வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதனை தொடர்ந்து பல பிரபலங்கள் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் தேசிய கொடியை DP ஆக மாற்றி வந்தனர். மேலும் அவர்களது வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றி வந்தனர். நடிகர் ரஜினிகாந்த் கூட தனது வீட்டில் தேசியக் கொடியை ஏற்றி உள்ளார். மேலும் விஜய், சூரி என பலரும் அவர்களது இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றி உள்ளனர். இந்த நிலையில் தான் பிசி ஸ்ரீராம் தற்போது இந்த பதிவை பகிர்ந்துள்ளார்.