CINEMA
வந்தியதேவன் கதாப்பாத்திரத்தில் இருந்து இன்னும் வெளிவராத கார்த்தி… இதோ இது தான் அதுக்கு சாம்ப்பிள்
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் வந்தியதேவன் கதாப்பாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ள நிலையில் தற்போது ஜெயராமின் கதாப்பாத்திரத்தை பார்த்து அத்திரைப்படத்தில் இடம்பெற்ற வசனத்தை டிவிட்டாக பகிர்ந்துள்ளார்.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற 30 ஆம் தேதி வெளிவருகிறது. இத்திரைப்படத்தை மணி ரத்னம் இயக்கியுள்ளார். ஏ ஆர் ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இதில் சீயான் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ரஹ்மான், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, ஜெயம் ரவி, சரத் குமார், பார்த்திபன், ஜெயராம் என பலரும் நடித்துள்ளனர்.
“பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கமல் ஹாசனும் ரஜினிகாந்தும் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்பு ஜெயராம் இத்திரைப்படத்தில் ஏற்று நடித்த ஆழ்வார்க்கடியான் நம்பி என்ற கதாப்பாத்திரத்தின் அறிவிப்பு வெளியானது. இக்கதாப்பாத்திரம் ஒரு உளவாளி கதாப்பாத்திரம் ஆகும்.
“பொன்னியின் செல்வன்” நாவலில் ஆழ்வார்க்கடியான் நம்பி கதாப்பாத்திரம் எந்த இடமாக இருந்தாலும் யார் கண்ணிலும் படாமல் உளவு பார்ப்பதில் கில்லாடி.
இந்த நிலையில் இந்த அறிவிப்பை தொடர்ந்து “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் வந்தியதேவனாக நடித்த கார்த்தி, தனது டிவிட்டர் பக்கத்தில் “ஓய் நம்பி இங்கயும் வந்துவிட்டாயா.. உம்மை மட்டும் Block செய்யவும் முடியவில்லை report பண்ணவும் முடியவில்லை… சரியான தொல்லையப்பா” என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த டிவீட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஓய் நம்பி இங்கேயும் வந்துவிட்டாயா…. உம்மை மட்டும் block செய்யவும் முடியவில்லை report பண்ணவும் முடியவில்லை….சரியான தொல்லையப்பா. #ActorJayaram😵💫 https://t.co/1TvBBD2L5d
— Actor Karthi (@Karthi_Offl) September 5, 2022
