Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

முடிவானது விடுதலை முதல் பாகம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

CINEMA

முடிவானது விடுதலை முதல் பாகம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

“விடுதலை” திரைப்படத்தின் முதல் பாகம் உறுதியாகி உள்ளதாக படக்குழுவினரிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி , சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “விடுதலை”. இதில் சூரி கதாநாயகனாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் நடைபெற்று வந்தது.

இத்திரைப்படத்தின் கதை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “துணைவன்” சிறுகதையை தழுவி எழுத்தப்பட்டதாகும். ஒரு பொதுவுடைமைவாத போராளிக்கும் காவலருக்குமான உரையாடலே இச்சிறுகதையின் மையப்பகுதி. ஆனால் வெற்றி மாறன் திரைப்படத்திற்கு ஏற்ப பல சுவாரசியங்களை இணைத்து திரைக்கதையை எழுதியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த ஆண்டு இத்திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் “விடுதலை” திரைப்படத்தை பற்றிய ஒரு முக்கிய அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. இன்று இயக்குனர் வெற்றி மாறனின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விரைவில் “விடுதலை” முதல் பாகத்தின் வெளியீடு குறித்தான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“விடுதலை” திரைப்படத்தை ரெட் ஜெயின்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட உள்ளார். உதயநிதி ஸ்டாலின் தற்போது “மாமன்னன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தையும் உதயநிதி தான் தயாரித்து வருகிறார். மேலும் கார்த்தியின் “சர்தார்”, ஜெயம் ரவியின் “கேப்டன்”, சிம்புவின் “வெந்து தணிந்தது காடு” ஆகிய திரைப்படங்களை வெளியிட உள்ளார்.

விடுதலை” திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோருடன் இணைந்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top