CINEMA
“எந்த படத்தையும் விடமாட்டார் போலயே”.. உதயநிதி வெளியிடும் புதிய திரைப்படம் இது தான்..
ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின் மூலம் உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் புதிய திரைப்படம் குறித்த அப்டேட் வெளிவந்துள்ளது.
ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின் மூலம் உதயநிதி ஸ்டாலின் சமீப காலமாக பல திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார். “ராதே ஷயாம்”, “டான்”, “விக்ரம்”, “காத்துவாக்குல ரெண்டு காதல்”, “குலு குலு”, “லால் சிங் சத்தா”, “கோப்ரா” என பல திரைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
மேலும் “கேப்டன்”, “வெந்து தணிந்தது காடு”, “விடுதலை” ஆகிய திரைப்படங்களும் வெளிவர தயாராக இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் ஒரு புதிய திரைப்படத்தை வெளியிட உள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் உருவான “காஃபி வித் காதல்” என்ற திரைப்படம் தான் அது. இதில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அம்ரிதா, திவ்ய தர்ஷினி, ரைஸா, சம்யுக்தா, மாளவிகா சர்மா என பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட உள்ளார். வருகிற அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
Happy to associate with #SundarC’s #CoffeeWithKadhal.☕️💗
Releasing in cinemas on October 7️⃣th! @khushsundar @Udhaystalin #AvniCinemax #BenzzMedia @U1Records @JiivaOfficial @thisisysr @Actor_Jai @Act_Srikanth @ImMalvikaSharma @Actor_Amritha @DhivyaDharshini @raizawilson pic.twitter.com/mMtSEEEfvq
— Red Giant Movies (@RedGiantMovies_) September 5, 2022
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் “கழகத்தலைவன்” என்ற திரைப்படம் வெளியாக தயாராக உள்ளது. மேலும் இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் “மாமன்னன்” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
அதே போல் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் “இந்தியன் 2” திரைப்படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறார். மேலும் கமல் ஹாசன் தயாரிப்பில் ஒரு புதிய திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து நெட்டிசன்கள் “எந்த திரைப்படத்தையும் உதயநிதி விடமாட்டார் போலயே” என இணையத்தில் கேலி செய்து வருகின்றனர்.