CINEMA
வடிவேலு பாலாஜியின் புகைப்படத்தை தொட்டு ஆசீர்வாதம் பெற்ற புகழ்-பென்ஸ் ரியா தம்பதியினர்..
புகழ்-பென்ஸ் ரியா தம்பதியினர் மறைந்த காமெடி நடிகர் வடிவேலு பாலாஜியின் புகைப்படத்தை தொட்டு வணங்கி ஆசீர்வாதம் பெற்றனர்.
விஜய் தொலைக்காட்சியின் மூலம் புகழ்பெற்ற புகழ், “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து பார்வையாளர்களை சிரிக்க வைத்தார். அதன் பின் புகழின் புகழ் உச்சத்தை தொட்டது.
இவருக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உருவானது. இதனை தொடர்ந்து புகழ் “சிக்சர்”, “சபாபதி”, “என்ன சொல்ல போகிறாய், “வலிமை”, “வீட்ல விஷேசம்”, “யானை”, “காசேதான் கடவுளடா”, “யானை” என பல திரைப்படங்களில் புகழ் நடித்துள்ளார்.
தற்போது “ஜூ கீப்பர்” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவரின் வளர்ச்சி பலரையும் வியக்க வைத்துள்ளது.
இதனிடையே புகழ், பென்ஸ் ரியா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. ரசிகர்கள் பலரும் புகழுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். புகழ்-பென்ஸ் ரியா திருமணத்தில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் மறைந்த காமெடி நடிகர் வடிவேலு பாலாஜியின் புகைப்படத்தை புகழ்-பென்ஸ் ரியா தம்பதியினர் தொட்டு வணங்கினர். அப்புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட புகழ் “இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் மாமா. உங்களது திருமண நாளில் என்னுடைய வாழ்க்கை பயணத்தில் அடுத்த கட்டத்திற்கு அடி எடுத்து வைக்கிறேன். உங்களது ஆசீர்வாதம் எப்போதும் என்னுடன் இருக்கும் என நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் பார்வையாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
வடிவேலு பாலாஜி விஜய் தொலைக்காட்சியில் “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியின் மூலம் காமெடியனாக பிரபலமானவர். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.