CINEMA
சிம்பு படம் வெளியாகும் தேதியில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும்.. கூல் சுரேஷ் வேண்டுகோள்..
சிம்பு நடிப்பில் உருவான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் வெளியாகும் நாளில் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என நடிகர் கூல் சுரேஷ் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் கூல் சுரேஷ் சிம்புவின் தீவிர ரசிகர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. சமீப காலமாக இவரது வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
“வெந்து தணிந்தது காடு, எஸ் டி ஆர்க்கு வணக்கத்த போடு” என்று இவர் பேசிய வசனம் வேற லெவலில் ரீச் ஆனது. அதனை தொடர்ந்து இவர் எங்கு சென்றாலும் மீடியா இவரை வளைத்து விடும்.
இந்த நிலையில் தற்போது ஒரு பேட்டியில் கூல் சுரேஷ் தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அதாவது வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி சிம்புவின் “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் வெளியாகிறது. ஆதலால் அதனை முன்னிட்டு அந்த நாளில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
“வெந்து தணிந்தது காடு” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. முதல் பாகம் வருகிற 15 ஆம் தேதி வெளிவருகிறது. இத்திரைப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டெர்னேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் இத்திரைப்படத்தை வெளியிட உள்ளார்.
“வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தில் சிம்புவுடன் சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ் ஆகியோர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
