Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“உங்களுடைய சிறந்த படம் இது தான்”.. பா ரஞ்சித்தை பாரட்டிய சூப்பர் ஸ்டார்

CINEMA

“உங்களுடைய சிறந்த படம் இது தான்”.. பா ரஞ்சித்தை பாரட்டிய சூப்பர் ஸ்டார்

“நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் பா ரஞ்சித்தை பாராட்டி புகழ்ந்துள்ளார் ரஜினிகாந்த்.

பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த மாதம் 31 ஆம் தேதி வெளியான திரைப்படம் “நட்சத்திரம் நகர்கிறது”. ஜாதி, மதம், பாலினம் ஆகியவற்றை தாண்டியது தான் காதல் என்ற மையக்கருத்தை வைத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

“கோப்ரா” திரைப்படமும் இத்திரைப்படமும் ஒரே நாளில் வெளியான நிலையில் “நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படம் சொற்பமான திரையரங்குகளிலேயே வெளியானது. எனினும் இத்திரைப்படத்திற்கு வந்த வரவேற்பை பார்த்து காட்சிகள் அதிகரிக்கப்பட்டன.

இந்த நிலையில் நல்ல திரைப்படம் எது வந்தாலும் படக்குழுவினரை அழைத்து பாராட்டும் ரஜினிகாந்த். தற்போது “நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படத்தையும் பாராட்டியுள்ளார். ஆம்!

“நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் இயக்குனர் பா ரஞ்சித்தை அழைத்து “உங்கள் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த படம் இது தான். நடிகர்கள், ஒளிப்பதிவு, இசை என எல்லாமே மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. படம் எனக்கு மிகவும் பிடிந்திருந்தது. நான் மிகவும் ரசித்தேன்” என பாரட்டியுள்ளார்.

“காதலும் ஒரு அரசியல் தான்” என தனது கருத்தை மிகவும் தைரியமாக இத்திரைப்படத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கிறார் பா ரஞ்சித் என “நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படத்தை குறித்து விமர்சகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

“அட்டக்கத்தி” திரைப்படத்திற்கு பிறகு “நட்சத்திரம் நகர்கிறது” என்ற  ஒரு முழு நீள காதல் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் பா ரஞ்சித். “நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துசாரா விஜயன், கலையரசன், ஹரி கிருஷ்ணன், சுபத்ரா ராபர்ட், ஷபீர் கல்லரக்கல் ஆகிய பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு டென்மா இசையமைத்துள்ளார்.

“நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படத்தை தொடர்ந்து பா ரஞ்சித் சீயான் விக்ரமை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in CINEMA

To Top