Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“ஹாலிவுட்” இயக்குனருக்கு நேர்ந்த சோகம்; மகளை நினைத்து வருந்திய துக்க நிலை..

GOSSIPS

“ஹாலிவுட்” இயக்குனருக்கு நேர்ந்த சோகம்; மகளை நினைத்து வருந்திய துக்க நிலை..

தமிழின் முன்னணி இயக்குனரான “ஹாலிவுட்” இயக்குனருக்கு தனது மகளின் செயலால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

தமிழில் பல ஆண்டுகளாக ஹாலிவுட்டிற்கு நிகரான பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கி “ஹாலிவுட்” டைரக்டராக வலம் வருபவர் அவர். சமீபத்தில் அவர் “குழப்ப” நடிகரை வைத்து இயக்கிய திரைப்படம் பாதியிலேயே நின்ற நிலையில், தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகனை வைத்து படம் எடுத்து வருகிறார்.

இதனிடையே “ஹாலிவுட்” இயக்குனரின் இளைய மகள் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். அதுவும் ஒரு கிராமத்து திரைப்படத்தின் மூலம். அத்திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் அத்திரைப்படத்தின் பாடல் கூட சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டது.

இந்நிலையில் “ஹாலிவுட்” இயக்குனரின் இளைய மகள் தன்னிடம் கலந்து ஆலோசிக்காமலே அடுத்தடுத்த திரைப்படங்களை புக் செய்து வருகிறாராம். அப்பா என்ற முறையிலும் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்ற முறையிலும் கூட தன்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்பதில்லையாம்.

இதனால் “ஹாலிவுட்” இயக்குனர் பெரும் சோகத்தில் இருக்கிறாராம். மேலும் சமீபத்தில் தனது மூத்த மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த பிளான் போட்ட இயக்குனர், என்ன காரணம் என்று சொல்லாமலே ரத்து செய்தார். மேலும் மூத்த மகளின் கணவர் ஒரு “பெண்” விஷயத்தில் எக்குத் தப்பாக சிக்கினார் எனவும் செய்திகள் வெளிவந்தன.

இது போன்ற பல சம்பவங்களால் ஏற்கனவே துவண்டு போன “ஹாலிவுட்” இயக்குனர் தற்போது தனது இளைய மகள் தன்னிடம் எதுவுமே கலந்து ஆலோசிக்காமல் அவராகவே அடுத்தடுத்த திரைப்படங்களை புக் செய்து வருவது மேலும் துன்பத்தை கிளப்பியதாம். இதனால் பெருத்த சோகத்தில் இருக்கிறாராம் “ஹாலிவுட்” இயக்குனர்.

Continue Reading

More in GOSSIPS

To Top