CINEMA
சிவகார்த்திகேயன் படத்தில் கவுண்டமணியா…?? வேற லெவல் காம்போவா இருக்கே..
சிவகார்த்திகேயன் படத்தில் கவுண்டமணி நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் கே வி இயக்கிய “பிரின்ஸ்” திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதில் சிவகார்த்திகேயனுடன் மரியா, சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதில் சாய் பல்லவி ஜோடி சேர்கிறார். இத்திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பாக கமல் ஹாசனும் சோனி பிக்சர்ஸும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் “மாவீரன்” திரைப்படத்தில் நடிக்க உள்ளார். “மண்டேலா” இயக்குனர் மடோனே அஸ்வின் இத்திரைப்படத்தை இயக்குகிறார். தற்போது இத்திரைப்படம் குறித்தான ஒரு சுவாரசியமான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி இணையவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
கவுண்டமணி பல திரைப்படங்களில் செந்திலுடன் சேர்ந்து நகைச்சுவையில் கலக்கி எடுத்திருப்பார். கவுண்டமணி- செந்தில் காம்போவிற்கு தமிழ் சினிமாவில் தனி இடமே உண்டு. பல வருடங்களாக இந்த காம்போ தமிழ் சினிமாவில் கோலோச்சி வந்தது. அதன் பின் இருவருமே திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்கள். செந்தில் மட்டும் அவ்வப்போது தலை காட்டுகிறார்.
சிவகார்த்திகேயன் நகைச்சுவையில் பிச்சி உதறுவார். அவரோடு கவுண்டமணி இணைந்தால் சொல்லவே தேவையில்லை. கவுண்டமணி இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பெரியப்பாவாக நடிக்கிறார் என கூறப்படுகிறது.
“மாவீரன்” திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவர உள்ளது. இத்திரைப்படத்தின் அட்டகாசமான டைட்டில் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளியானது. அதில் சிவகார்த்திகேயனை பொம்மை போல் மேலே இருந்து கயிறு கட்டி இயக்குகிறார்கள். அந்த வீடியோவின் முடிவில் காமிக்ஸ் புத்தகத்தில் சிவகார்த்திகேயன் இருப்பது போன்று காட்டப்படுகிறது. இது முந்தைய சிவகார்த்திகேயன் திரைப்படங்களை விட வித்தியாசமான படைப்பாக திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
